விஜய் சேதுபதி வெளியிட்ட பிக்பாஸ் சாக்ஷி அகர்வாலின் 'பொய்யின்றி அமையாது உலகு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Published : Dec 31, 2022, 06:20 PM IST
விஜய் சேதுபதி வெளியிட்ட பிக்பாஸ் சாக்ஷி அகர்வாலின் 'பொய்யின்றி அமையாது உலகு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

சுருக்கம்

செல்போனை மையப்படுத்தி தயாராகியிருக்கும் 'பொய்யின்றி அமையாது உலகு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டத்தை விஜய் சேதுபதி வெளியிட்டார்.  

நடிகர் விவேக் பிரசன்னா - நடிகை சாக்ஷி அகர்வால் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'பொய்யின்றி அமையாது உலகு' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜயசேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பொய்யின்றி அமையாது உலகு'. இதில் நடிகர்கள் விவேக் பிரசன்னா, டேனியல் ஆனி போப், அர்ஜுனன், பிரவீண் நடிகைகள் சாக்ஷி அகர்வால், ஸ்வயம்சித்தா, சஹானா, ஜமுனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை பேட்டை' வசந்த் இசையமைத்திருக்கிறார். காமெடியுடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை தியா சினி கிரியேசன்ஸ் மற்றும் ரூல்ஸ் பிரேக்கர்ஸ் புரொடக்சன் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெகன் நாராயணன் மற்றும் சக்திவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

செம்ம கொண்டாட்டத்தில் 'பாக்கிய லட்சுமி' சீரியல் நடிகர்கள்..! கேக் வெட்டி ஜமாய்த்த போட்டோஸ் வைரல்!

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

என் அந்தரங்க வீடியோவை வெளியானது! அதிர்ந்து போன குடும்பம்.. பகீர் தகவலை வெளியிட்ட ரேஷ்மா பசுபுலேட்டி!

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' நான்கு ஜோடிகள் கெட் டூ கெதர் சந்திப்பு ஒன்றில் சந்திக்கிறார்கள். இவர்கள் தங்களது செல்போனை வைத்துக்கொண்டு ஜாலியான விதிகளுடன் விளையாட தொடங்குகிறார்கள். அதாவது இந்த எட்டு பேரின் செல்போன்களுக்கு வரும் குறுஞ்செய்தியையும், அழைப்புகளையும் அனைவரும் அறிந்து கொள்ளும்படி வைத்திருக்க வேண்டும். இந்த நிபந்தனையுடன் நடைபெறும் அந்த விளையாட்டு, நகைச்சுவையாக தொடங்கி பல எதிர்பாராத சுவாரசியமான சம்பவங்களுடன் பயணிக்கிறது. இந்த ஆண்டில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ படத்தைத் தொடர்ந்து செல்போனை மையப்படுத்திய திரைக்கதை என்பதால், இதற்கு இளம் தலைமுறையினரிடத்தில் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம். நகைச்சுவையுடன் கலந்த ஃபீல் குட் படைப்பாக 'பொய்யின்றி அமையாது உலகு' தயாராகி இருக்கிறது'' என்றார்.

தீர்மானங்களுக்கான நேரம் இது! வாட்டி வதக்கும் மயோசிட்டிஸ்! வலியை வெளிப்படுத்தாமல் சமந்தா போட்ட புத்தாண்டு பதிவு

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

50 ஆண்டு சாதனை.. பல தலைமுறைகளை கவர்ந்தவர்.. ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
நான் வெறி எடுத்து பாட்டு எழுதிய படம் படையப்பா..! சர்ச்சை கவிஞர் வைரமுத்து அதிர்ச்சி கருத்து