நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ள, 'பத்து தல' படத்தின், ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் சிம்பு நடித்துள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சிம்பு 'பத்து தல' படத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வந்த போது, திடீரென தன்னுடைய தந்தை டி.ராஜேந்தருக்கு வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டது. இதனால் தன்னுடைய படப்பிடிப்பை நிறுத்தி வைத்து விட்டு, அமெரிக்கா பறந்த சிம்பு தந்தையின் உடல்நலம் தேறிய பின்னர், மீண்டும் சென்னைக்கு வந்து இந்த படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த துவங்கினார்.
ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு தாடி.. மீசை... என மிரட்டல் லுக்கில் நடிகர் சிம்பு நடித்துள்ள இந்த படம் குறித்து அப்டேட்டுக்காக அவருடைய ரசிகர்கள் காத்திருந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மார்ச் 30ஆம் தேதி, சிம்புவின் 'பத்து தல' திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், நடிகர் கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரியா பவானி சங்கர், கலையரசன், மனுஷ புத்திரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை நீண்ட இடைவேளைக்கு பின்னர், 'சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள, இந்த படம் குறித்த ட்ரைலர், டீசர், ஆடியோ லான்ச் குறித்த தகவல்களும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்க பொண்ணு மட்டும் காவி நிற பிகினி உடையில் போஸ் கொடுக்கலாமா? இயக்குனரை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!
in
Update 👇 https://t.co/oPXj4jrYdm