பிரதமர் மோடி தாயார் மரணம்... ரஜினிகாந்த் - இளையராஜா இரங்கல்!

Published : Dec 30, 2022, 08:10 PM IST
பிரதமர் மோடி தாயார் மரணம்... ரஜினிகாந்த் - இளையராஜா இரங்கல்!

சுருக்கம்

பிரதமர் மோடியின் தாயார் மரணத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளையராஜா ஆகியோர் சமூக வலைத்தளம் மூலம் தங்களின் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.  

பாரத பிரதமர் மோடியை பெற்றெடுத்த தாயார், ஹீராபென் வயது மூப்பு காரணமாக, உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், கட்சி தொண்டர்கள், மக்கள், என பலர் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசை ஜாம்பவான் இளையராஜா ஆகியோர் சமூக வலைதளத்தின் மூலம் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

இதில் இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது... "நமது பாரத பிரதமர் மாண்புமிகு ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் தாயார் மறைவுற்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும், அடைந்தேன். பிரதமரின் தாயாக இருந்தாலும் தன் மகனிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காத தாய். எனது தாயாரு அவ்வாறே என்னிடம் எதையும் கேட்டதில்லை... நானும் எதுவும் கொடுத்ததில்லை. இப்படிப்பட்ட அன்னையார்களை உலகில் வேறு எங்கும் காண முடியுமா? அவர் மறைந்தது துயரம். நமது பிரதமர் அவர்கள் துயரத்தில் நான் பங்கு கொள்கிறேன், அன்னை ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.

அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய இதய பூர்வமான  இரங்கல்களை மோடியின் தாயாருக்கு தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார் ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

போலீஸ் விசாரணையில் விசாலாட்சி கொடுத்த ட்விஸ்ட்... கொற்றவையிடம் என்ன சொன்னார்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?