Sembi Review: கோவை சரளா 'செம்பி'யாக ரசிகர்கள் மனதை ஜெயித்தாரா? ட்விட்டர் விமர்சனம்!

Published : Dec 30, 2022, 01:58 PM IST
Sembi Review: கோவை சரளா 'செம்பி'யாக ரசிகர்கள் மனதை ஜெயித்தாரா?  ட்விட்டர் விமர்சனம்!

சுருக்கம்

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா - அஸ்வின் குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகி உள்ள 'செம்பி' திரைப்படம் எப்படி இருக்கிறது என ரசிகர்கள் கூறியுள்ள ட்விட்டர் கருத்துக்கள் குறித்த ஒரு பார்வை.  

'மைனா', 'கும்கி', போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பிரபு சாலமன், நடிகை கோவை சரளாவை கதையின் நாயகியாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் 'செம்பி'. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'காடன்' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில், தற்போது இயக்கியுள்ள 'செம்பி' திரைப்படம் மைனா, கும்கி, ஆகிய படங்களின் வரிசையில் இணைந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

பழங்குடியின மூதாட்டியாக கோவை சரளா தன்னுடைய நேர்த்தியான நடிப்பை 'செம்பி', படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். பாட்டி - பேத்தி இடையில் உண்டான பாசப்பிணைப்பாக இப்படத்தில் கதை உருவாகியுள்ளது. அரசியல்வாதியின் மகனால் பாலியல் வன்புணர்வு செய்யப்படும் தன்னுடைய பேத்தியின் நீதிக்காக போராடும், ஒரு பாட்டி கதாபாத்திரத்தில் கோவை சரளா நடித்துள்ளார்.  இவர் நடிப்பில் இதற்கு முன்னர் பல்வேறு காமெடி காட்சிகளை ரசிகர்கள் பார்த்து இருந்தாலும், இந்த படத்தில் யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகவும் எமோஷ்னல் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.

அதேபோல் இவருக்கு பேதியாக நடித்துள்ள நிலா கதாபாத்திரமும் பார்ப்பவர்கள் நெஞ்சை உருக வைக்கிறது. கோவை சரளா மற்றும் நிலா ஆகியோருக்கு  நீதி கிடைக்கப் போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் அஸ்வின் நடித்துள்ளார். ஒரு வேலை இப்படம் அவருக்கு அறிமுக படமாக இருந்தால் வெற்றி நாயகனாக கூட ஜொலித்திருக்கும் வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் விமர்சனங்கள் இப்படத்திற்கு கிடைத்து வந்தாலும்... ரசிகர்கள் இப்படத்தை பார்த்து விட்டு என்ன கூறியுள்ளனர் என்பதை இங்கே பார்ப்போம்...

 

 

பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருப்பதாகவும், 'செம்பி' படத்திற்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

 

செம்பி படத்திற்கு தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால், இப்படம் அஸ்வின் குமாருக்கு முதல் படமாக இருந்திருந்தால், அவருடைய சினிமா கேரியர் வேற லெவலில் இருந்திருக்கும்.அஸ்வின் மிகவும் திறமையாக நடித்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி போட்டுள்ள பதிவு. 

 

குழந்தை பாலியல் வன்புணர்வு விஷயத்தை இப்படத்தின் மூலம் பிரபுசாலமன் தோலுரித்து காட்டியுள்ளார். அஷ்வின்குமார், கோவைசரளா நடிப்பு அபாரம். ஆனால் சில நிமிடங்களில் கதை பொறுமையாக நகர்கிறது. நிவாஸ்கே பிரசன்னா BGM அசத்தல். சில காட்சிகள் மட்டுமே நன்றாக எழுதப்பட்டுள்ளன, ஆனால் பெரும்பாலானவை கதைக்கு தேவை இல்லை என தோன்றுகிறது. இது ஆவரேஜ் படம் என ரசிகர் ஒருவர் போட்டுள்ள பதிவு. ஒரு சாதாரண மனிதன் உரிமைக்காக நிற்கும்போது நம்பிக்கை என்பது கடுமையான உணர்ச்சி

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்