என் அந்தரங்க வீடியோவை வெளியானது! அதிர்ந்து போன குடும்பம்.. பகீர் தகவலை வெளியிட்ட ரேஷ்மா பசுபுலேட்டி!
மார்ஃபிங் செய்யப்பட்ட தன்னுடைய செக்ஸ் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான போது, அதனை எப்படி எதிர்கொண்டேன் என்பது குறித்து... பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி.
தொகுப்பாளராக சன் டிவியில் அறிமுகமான ரேஷ்மா பசுபுலேட்டி இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து, சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் நடித்த 'வம்சம்', 'வாணி ராணி', 'மரகத வீணை', 'ஆண்டாள் அழகர்' போன்ற சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட ரேஷ்மா, பின்னர் திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார். அந்த வகையில் இவர் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடித்த, 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் நடித்த புஷ்பா கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.
'வந்தே வந்தேமாதரம், வாழிய நமது பாரதம்' பாடல் மூலம் பான் இந்தியா இசையில் தடம் பதிக்கும் டி.ராஜேந்தர்!
Reshma pasuleti
பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும், சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில், கோபியின் இரண்டாவது மனைவி ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கும் இவருடைய நடிப்புக்கும் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில், இயக்குனர் கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி வரும் 'தமிழா தமிழா' என்கிற விவாத நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ரேஷ்மா தன்னுடைய மாஃபிங் செய்யப்பட்ட அந்தரங்க வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான போது, அதனை எப்படி எதிர்கொண்டேன்? என தெரிவித்துள்ளார்.
நான் அமெரிக்காவில் இருந்தபோது, திடீரென தன்னுடைய சகோதரி ஒருநாள் போன் செய்து என்னுடைய செக்ஸ் வீடியோ வெளியாகி உள்ளதாக தெரிவித்தார். உடனே நான் அப்படி இருக்க வாய்ப்பில்லை என கூறி அந்த வீடியோவை எனக்கு அனுப்புமாறு தெரிவித்தேன். பின்னர், அந்த வீடியோ முழுக்க முழுக்க மாப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது எனக்கு தெரிய வந்தது. மேலும் தன்னுடைய அம்மா தான் இதனை தன்னுடைய சகோதரி இடம் கேட்க சொல்லி கூறியதும் எனக்கு தெரிந்தது.
இது குறித்த உண்மையை என் குடும்பத்தினருக்கு புரிய வைத்தேன். மேலும் என்னுடைய அப்பா ஒரு தயாரிப்பாளர், என்னுடைய சகோதரர் ஒரு நடிகர், என்பதாலும் சினிமா பின்னணி பற்றி அவர்களுக்கு நன்றாக தெரியும் என்பதாலும்... நான் சொன்னதை அவர்கள் நம்பினார்கள். எனவே இந்த பெரிய பிரச்னையை எதிர்கொள்வது எனக்கு எளிமையாக இருந்தது என தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு இல்லத்தரசிகள் மனம் கவர்ந்து TRP-யில் டாப் 10 இடத்தை சீரியல்கள் பற்றிய தகவல்!
ஆனால் எந்த ஒரு திரை பின்னணியும் இல்லாத ஒரு எளிய பெண்ணின் வாழ்க்கையில் இது நடந்திருந்தால், அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, தற்கொலை முடிவை கூட எடுத்து இருக்கலாம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.