மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - நயன்தாரா ஜோடி; எந்தப் படத்தில் தெரியுமா?

 
Published : Dec 05, 2017, 11:01 AM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - நயன்தாரா ஜோடி; எந்தப் படத்தில் தெரியுமா?

சுருக்கம்

Vijay Sethupathi joins again with Nayantara

நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘இமைசக்கா நொடிகள்’ படத்தில் சிறப்பு வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாராம்.

'டிமான்ட்டி காலனி' படத்தைத் தொடர்ந்து கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து.

அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தின் வில்லனாக அனுராக் காஷ்யப் நடித்து வருகிறார்.

இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான அனுராக் காஷ்யப் தமிழில் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தப் படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'நானும் ரவுடிதான்' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி - நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் இது என்பது இந்த்ப் படத்தின் எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.

ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநராக செல்வகுமார், வசனகர்த்தாவாக பட்டுக்கோட்டை பிரபாகர், இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா, படத்தொகுப்பாளராக புவன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட பணிகளை துரிதப்படுத்தி ஜனவரியில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது என்பது கொசுறு தகவல்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்