எல்லாமே கொடுத்த மக்களுக்கு நான் திருப்பி கொடுக்கும் படம்தான் "வேலைக்காரன்" - சொன்னவர் எஸ்.கே...

 
Published : Dec 05, 2017, 10:45 AM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
எல்லாமே கொடுத்த மக்களுக்கு நான் திருப்பி கொடுக்கும் படம்தான் "வேலைக்காரன்" - சொன்னவர் எஸ்.கே...

சுருக்கம்

ill give velaikkaran for who gave me everything SK ...

எனக்கு எல்லாமே கொடுத்த மக்களுக்கு நான் திருப்பி கொடுக்கும் ஒரு கருத்தான படம்தான் "வேலைக்காரன்" என்று எஸ்.கே எனும் சிவகார்த்திகேயன் உருக்கமாக தெரிவித்தார்.

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், அனிரூத், மோகன்ராஜா என ஏராளமானோர் கலந்து கொண்டி விழாவை சிறப்பித்தனர்.

இதில், நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது:  ‘‘தனக்கு எல்லாமே கொடுத்த மக்களுக்கு நான் திருப்பி கொடுக்கும் ஒரு கருத்தான படம்தான் இந்த ’வேலைக்காரன்‘. இனிமேல் நான் விளம்பரங்களில் எப்போதுமே நடிக்கப் போவதில்லை" என்று கூறினார்.

விளம்பரங்களில்  நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கான காரணத்தை சிவகார்த்திகேயன் சொல்லவில்லை.

வேலைக்காரன் படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் பகத் பாசில், சினேகா உள்ளிட்ட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு ரம்ஜி செய்துள்ளார். இதன் தயாரிப்பாளர் ஆர். டி. ராஜா.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி