சசி கபூருக்கு கண்ணீர் நிறைந்த வணக்கங்கள் !!  கமலஹாசன்  அஞ்சலி !!!

 
Published : Dec 05, 2017, 09:22 AM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
சசி கபூருக்கு கண்ணீர் நிறைந்த வணக்கங்கள் !!  கமலஹாசன்  அஞ்சலி !!!

சுருக்கம்

kamal gave homage to sashi kapoor in his twitter

இந்தி திரைப்பட உலகின் முன்னாள் சூப்பர் ஸ்டாரான சசி கபூர் மறைவுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கமலஹாசன் அஞ்சலி செலுத்தியுள்ளார். மேடை நாடகம் மற்றும் சினிமா ஆகிய துறைகளில் சசிகபூர் ஆற்றிய சேவைகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கமல் குறிப்பிட்டுள்ளார்.

1960 மற்றும்1970  ஆம் ஆண்டுகளில் இந்தியில் மிகவும் பிரபலமாக விளங்கியவர் சசிகபூர். சசி கபூர் பிரபல கபூர் குடும்பத்தை சேர்ந்தவர். கொல்கத்தாவில் பிறந்த சசிகபூர் தனது குழந்தை பருவத்திலேயே சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார்.

1961 முதல் இதுவரை 100க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்து உள்ளார். 3 முறை தேசிய விருதுகள் வாங்கி உள்ளார், பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் பத்மபூஷன் விருது உள்பட பல விருதுகளை பெற்று உள்ளார்.

இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக  மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சசிகபூர்  நேற்று காலமானார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மறைந்த நடிகர் சசிகபூருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,“மேடை நாடகம் மற்றும் சினிமா ஆகிய துறைகளில் ஆற்றிய சேவைகளுக்காக சசிகபூர் அவர்களுக்கு நன்றி. அந்தச் சேவைகளை முன்னெடுத்துச் செல்லும் கபூர் குடும்பத்தினருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.



கலைகளின் மீது அன்புகொண்ட மனிதருக்கு என்னுடைய கண்ணீர் நிறைந்த வணக்கங்கள் என்றும்  என்னைப் போன்ற அவரின் பல ரசிகர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கமலஹாசன் கூறியுள்ளார்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்