ராகுலுக்கும் மாளவிகாவிற்கும் திருமணமா...?

 
Published : Dec 04, 2017, 08:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
ராகுலுக்கும் மாளவிகாவிற்கும் திருமணமா...?

சுருக்கம்

nandhini seriyal actress malavika and rahul marriage

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நந்தினி' சீரியலுக்கு இல்லத்தரசிகள் பலர் மட்டுமின்றி இளைஞர்கள் பலரும் ரசிகர்கள்தான். அந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் ராகுலுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் உள்ளனர்.

கிட்டத் தட்ட அவரை பலர் வெள்ளித்திரை ஹீரோ ரேஞ்சுக்கு தான் பார்க்கின்றனர். இந்நிலையில் இவரும் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகை மாளவிகாவும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது.

இந்த ஜோடிகள் ஏற்கெனவே மலையாளத்தில் ஒரு தொடரிலும் நடித்து வருகின்றனர். இதனால் தானோ என்னவோ, இப்படி ஒரு வதந்தி பரவியது. மேலும் இருவருக்கும் திருமணமே  ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நந்தினி சீரியல் ஜோடிகளான இவர்களிடம் இந்தக் கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள இவர்கள்  இதை முற்றிலுமாக மறுத்துள்ளனர்.  ராகுல் ரவி மற்றும் மாளவிகா இருவரும் நண்பர்களாக மட்டும் தான் பழகி வருவதாகவும் இப்படி ஒரு செய்தி வெளியானபோது நாங்களே சிரித்தோம் என கூறியுள்ளனர்.

மேலும், இவர்களுடன் அந்தப் பேட்டியில் நித்யாவும் இருந்தார், அவரும் அந்த சீரியலில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் இவர். தமிழ் ரசிகர்கள் அளவுகடந்த அன்பு வைத்துள்ளார்கள், அவர்கள் அனைவருக்கும் நன்றி என்று நித்யா கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி