அஜித் சந்திப்பில் நடந்தது என்ன? நிவின் பாலி ஓபன் டாக்!

 
Published : Dec 04, 2017, 06:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
அஜித் சந்திப்பில் நடந்தது என்ன? நிவின் பாலி ஓபன் டாக்!

சுருக்கம்

nivin pauly open talk by ajith shalini meet

மலையாள நடிகைகள் என்றால் எப்போதுமே தமிழ் சினிமாவில் ஸ்பெஷல் தான்! அதே போல் தற்போது மலையாள நடிகர்களும் தமிழ் ரசிகர்களை கவனிக்க வைத்துள்ளனர். அதில் முக்கியமானவர்கள் என்று பார்த்தால், மம்மூட்டி, மோகன் லால், பிரித்திவி ராஜ் , நிவின் பாலி உள்ளிட்டோர் எனக் கூறலாம்.

இந்நிலையில் கடந்த வருடம் மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. 

இந்தப் படத்தைப் பார்த்த அஜித் மற்றும் ஷாலினி, நிவின் பாலியை தங்களது வீட்டிற்கு அழைத்து பாராட்டியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது என்பது  அனைவரும் அறிந்தது தான்.

இந்த நிலையில் அஜித்தை சந்தித்த போது என்ன நடந்தது என்பதை நிவின் பாலி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இது குறித்து பேசியுள்ள இவர், கோலிவுட் நடிகர்களில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவரான அஜித் அவருடைய மனைவியுடன்  பிரேமம் படம் பார்த்துள்ளார். அதில் என்னுடைய நடிப்பு அவருக்கு மிகவும் பிடித்துப் போனதால் என்னைப் பாராட்டுவதற்காக என்னை வீட்டிற்கு அழைத்தார்கள். அப்போது அஜித் அவர்களே பிரியாணி மற்றும் ஒரு சில  உணவு வகைகளை சமைத்து எனக்கு பரிமாறினார் . 

பின்  வெற்றிப்படம் கொடுப்பதை விட வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என என்னிடம் கூறி அடுத்த படம் என்ன, எப்படிப் பட்ட கதைகள் தேர்ந்தெடுக்கலாம் என ஒரு மணி நேரம் போல் என்னிடம் அமைதியாகப் பேசினார் என நிவின் பாலி கூறியுள்ளார்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!
கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்