பத்மபூஷன் விருதும், பால்கே விருதும் வாங்கிய சசிகபூர் பற்றி தெரியுமா?

 
Published : Dec 04, 2017, 06:47 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
பத்மபூஷன் விருதும், பால்கே விருதும் வாங்கிய சசிகபூர் பற்றி தெரியுமா?

சுருக்கம்

The versatile actor will continue to live in our hearts through his memorable films

பிரபல இந்தி நடிகரும், கபூர் குடும்பத்தின் இளையமகனுமான ஷசிகபூர் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. இந்த தகவலை அவரின் உறவினரும், நடிகருமான ரந்திரீர் கபூர் உறுதிசெய்தார்.

பிரபல திரைப்பட நடிகரும், நாடக நடிகருமான பிரித்விராஜ் கபூரின் 2-வது மகன் ஷசி கபூர் ஆவார். இவரின் சகோதரர் ராஜ் கபூர், சம்மி கபூர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷசிகபூர், கடந்த 1938ம் ஆண்டு மார்ச் 18ந்தேதி பிறந்தார். இதுவரை 175 இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ஜூனூன், கல்யுக், விஜிதா, உட்சவ் ஆகியோர் சக்கை போடு போட்டு, வசூலை வாரிக்குவித்தன.

ஷசி கபூர் சிறுவயிதிலேயே நடிப்புத்துறையில் இறங்கினார். தனது சகோதரர் ராஜ் கபூரின் ஆஹக், அவாரா ஆகிய திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கடந்த 1961ம் ஆண்டு வெளியான தர்மபுத்ரா திரைப்படத்தில் நடிகராக ஷசிகபூர் அறிமுகமானார். அதன்பின் 1980களில் வரை பாலிவுட் களத்தில் தனக்கென தனி இடத்தை ஷசிகபூர் பிடித்திருந்தார்.

சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுடன் ஷசிகபூர் இணைந்து நடித்த தேவார், சுகாக், கபி கபி, திரிசூல், சில்சிலா, நமக் ஹலால் ஆகியவை மிகப்பெரியசூப்பர் ஹிட் ஆகின.

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக இதயம் நோயால் பீடிக்கப்பட்டு, கடந்த 2014ம் ஆண்டு ஷசிகபூர் இருதய அறுவைசிகிச்சை செய்து கொண்டார். அதன்பின் அடிக்கடி உடல்நலம் குன்றி அவதிப்பட்ட ஷசிகபூர் ஞாயிற்றுக்கிழமை உடல் நலம் மோசமடைந்து, மும்பையில் உள்ள கோகிலா பென் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல், இன்று மரணமடைந்தார்.

ஷசி கபூருக்கு சஞ்சனா கபூர் என்ற மகளும், குணால் கபூர், கரண் கபூர் என்ற இரு மகன்களும் உள்ளனர்.  மனைவி ஜெனிபர் கபூர் கடந்த 1989ம் ஆண்டு இறந்துவிட்டார்.

கடந்த 2011ம் ஆண்டு ஷசி கபூருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருதும், 2015ம் ஆண்டு நடிப்புக்கான தாதேசாகேல் பால்கே விருதும் வழங்கப்பட்டது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்