சின்னப்பசங்க எங்களுக்காக ஃப்ரீயா ஆடிக்கொடுத்த நயன்: சிலிர்த்து சிலாகித்த சிவகார்த்தி...

 
Published : Dec 04, 2017, 02:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
சின்னப்பசங்க எங்களுக்காக ஃப்ரீயா ஆடிக்கொடுத்த நயன்: சிலிர்த்து சிலாகித்த சிவகார்த்தி...

சுருக்கம்

Sivakarthikeya open talk about his co-star nayanthara

கோலிவுட்டில் சிவகார்த்தியின் வேகம் வெகு சீரானது. மெரீனாவில் மெதுவாக ஃபர்ஸ்ட் கியர் போட்டு, லேசாக வேகமெடுத்து எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என டாப்கியருக்கு எகிறியிருக்கிறார். 
சிவாவின் மார்கெட் ஹாட்டாக இருந்த சூழலில், தனி ஒருவனின் தாறுமாறான வெற்றியால் இயக்குநர் மோகன் ராஜாவும் பீக்கில் இருந்தார். சட்டென்று இரண்டு கைகளும் இணைந்து ‘வேலைக்காரன்’ பிராஜெக்ட் உருவானது. 

இதில் சிவாவின் ஜோடி நயன்தாரா என்றதும் கோலிவுட்டில் அல்லு தெறித்தது. வேலைக்காரன் ஷூட் முடிந்து, போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகளும் முடிந்து படம் ரிலீஸுக்கு ரெடி! சிவகார்த்திக்கு எப்பவுமே ஸ்பெஷல் டியூன்ஸ் வைத்திருப்பார் அனிருத். இதிலும் அவர் ஏமாற்றவில்லை. குப்பத்து சாங்கெல்லாம் கொலைவெறி ஹிட்டாயிருக்கிறது. 

இந்நிலையில் வேலைக்காரன் பட விழாவில் இன்று பேசியிருக்கும் சிவகார்த்தி, வழக்கம்போல் தனது உயரத்தை பற்றியெல்லாம் கவலைப்படாமல், எந்த ஈகோவும் இல்லாமல் மனம் திறந்திருக்கிறார். 

அதிலும் அவர் நயனை பற்றி சிலாகித்திருக்கிறார் ...”ஏகன் படத்தில் தல-க்கு ஹீரோயின் நயன். அந்தப்படத்துல நானும் அருண்ராஜா காமராஜூம் நடிக்கிறதாயிருந்துச்சு. ஆனால் முடியலை. ஷூட்டிங் தொடங்கி ரெண்டு நாள் கழிச்சுதான் ஸ்பாட்டுக்கு போனோம். எங்களுக்கு வாய்ப்பே இல்லைன்னாலும் போனோம். 

அப்போ, ஸ்பாட்டுக்கு நயன் தாரா வர்றப்பவெல்லாம் ‘டேய்! நயன் தாராடா! நயன் தாராடா!ன்னு’ அருண் சொல்லிட்டே இருப்பார்ன். அப்போ அவங்களை தள்ளி இருந்து ஆச்சரியமா பார்த்தோம்.

அப்புறம் நான் ஹீரோவாகி எதிர்நீச்சல் பண்றப்ப எங்களுக்காக ஒரு பாட்டுக்கு ஆடினார். அந்தப்பாட்டுக்கு சம்பளம் கூட வாங்கலை. நட்புக்காக பண்ணிக் கொடுத்தார். ‘சின்னப்பசங்க, நல்ல முயற்சி! எடுக்குறீங்க.’ அப்படின்னு இலவசமாவே ஆடிக்கொடுத்தார். 

அதுக்கு அப்புறம் வேலைக்காரன் ஷூட்டிங்ல அவரைப் பார்த்தேன். 

இந்த 3 சமயத்துலேயும் நான் அவரை பார்த்து பிரமிச்சது, சரியான டைமுக்கு ஷூட்டுக்கு வர்றது, ஷூட் முடியுறவரைக்கும் ஸ்பாட்ல இருக்குறது. இதுதான் அவரோட குணமே.

இந்த டெடிகேஷன்தான் அவரை தனியா ஒரு படம் நடிச்சு வின் பண்ற அளவுக்கு கொண்டு போயி, அவரோட மார்க்கெட்டையும் உயர்த்தியிருக்குதுன்னு நம்புறேன்.” என்று சிலாகித்திருக்கிறார் சிவகார்த்தி. 
நயன் -ன்னா ச்சும்மாவா!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்