நடிகை அம்பிகாவின் கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி!

 
Published : Dec 04, 2017, 07:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
நடிகை அம்பிகாவின் கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி!

சுருக்கம்

trafic ramasamy full fill the actress ambika dream

வளர்ந்து வரும் 'டிராபிக் ராமசாமி' படம் தன் கனவை நிறைவேற்றியிருப்பதாக நடிகை அம்பிகா மகிழ்ந்து கொண்டிருக்கிறார். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது :

"நான் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன்.
பல்வேறு மொழிகளில் எவ்வளவோ பாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.

ஆனால் , செண்டிமெண்டோடு கலந்த  நகைச்சுவையான ஒரு கதாபாத்திரத்தில்  நடிக்க வேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆசையாக,  கனவாக இருந்து கொண்டிருந்தது  . 'டிராபிக் ராமசாமி' என்கிற படத்தின் மூலம் அந்தக்கனவு நிறைவேறி இருக்கிறது.

'நான் சிகப்பு மனிதன்'என்ற படத்தில்  ஒரு வக்கீல்  வேடத்தில் நடித்தேன். அதை  எஸ் .ஏ.சந்திரசேகர் இயக்கி இருந்தார். சுமார் முப்பது ஆண்டுகள் கழித்து அவர்  நடிக்கும் 'டிராபிக் ராமசாமி' என்கிற படத்தில் பதவி உயர்வு பெற்று நீதிபதியாக நடிக்கிறேன். அது  கதையோடு கலந்த நகைச்சுவை பாத்திரம்  . எனக்கு இது மிகவும் புதுமையான பாத்திரமாக மாறுபட்ட நடிப்பு  அனுபவமாக  இருந்தது. ஒரு வகையில் என் நீண்ட நாள் கனவு நிறைவேறிய திருப்தி வந்துள்ளது.

அந்தப் பாத்திரத்தில் நான் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்து இருக்கிறேன். இந்தப் படத்தை  விஜய் விக்ரம் இயக்குகிறார். " இவ்வாறு அம்பிகா கூறியிருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி