விஷால் தற்கொலைக்குத் தூண்டுகிறார்….. இயக்குநர் சேரன்  போர்க்கொடி…ஆவேசம் !!!

 
Published : Dec 05, 2017, 08:46 AM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
விஷால் தற்கொலைக்குத் தூண்டுகிறார்….. இயக்குநர் சேரன்  போர்க்கொடி…ஆவேசம் !!!

சுருக்கம்

Director cheran protest against to vishal

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்.கே,நகர் தொகுதியில் விஷால் போட்டியிட வேண்டும் என்றும், தயாரிப்பாளர் சங்கப் பிரச்சனைகளை அவர் தீர்த்து வைக்காததால் தங்களை அவர் தற்கொலைக்கு தூண்டுவதாகவுஙம் இயங்ககுநர் சேரன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி. மு.க., தி.மு.க., டி.டி.வி. தினகரன் அணி, பா.ஜ.க., நடிகர் விஷால், நாம் தமிழர் கட்சி, ஜெ.தீபா ஆகியோருக்கு இடையே  7 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஷால் நேற்று   வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். இந்த நிலையில்   தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலக வலியுறுத்தி, தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இயக்குநர் சேரன்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தயாரிப்பாளர்  சங்க தேர்தலில் விஷால் போட்டியிட்டு வெற்றி பெற்று 8 மாதங்கள் ஆகியும் இது வரை எந்த நன்மையையும் செய்யாத நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், விஷால் போட்டியிட வேண்டுமா? என சேரன் கேள்வி எழுப்பினார்.

விஷால் தேர்தலில் நிற்பதால் தயாரிப்பாளர் சங்கம் பாதிக்கப்படும் என்றும் அவர்   ராஜினாமா செய்யும் வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்த சேரன்,  தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் ராஜினாமா செய்யாவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

விஷால் தேர்தலில் நிற்பதால் அரசியல்வாதிகள் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் தயாரிப்பாளர்களை தற்பொலைக்கு தூண்டுவதாகவும் வேரன் ஆவேசமாக தெரிவித்தார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்