ரசிகனுக்காக "தளபதி 64" ஷூட்டிங் ஸ்பார்ட்டில் விஜய் சேதுபதி செய்த காரியம்... தீயாய் பரவும் வீடியோ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Dec 27, 2019, 01:04 PM IST
ரசிகனுக்காக "தளபதி 64" ஷூட்டிங் ஸ்பார்ட்டில் விஜய் சேதுபதி செய்த காரியம்... தீயாய் பரவும் வீடியோ...!

சுருக்கம்

ஷூட்டிங்கிற்கு செல்வதற்காக பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்த போதும், தனது தீவிர ரசிகருக்காக முகம் சுளிக்காமல் விஜய் சேதுபதி செய்த காரியம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

"பிகில்" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'கைதி' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் "தளபதி 64". இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இதில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாகக் கூறப்படுகிறது.ஏற்கெனவே, முதற்கட்டமாக சென்னையிலும், அடுத்த கட்டமாக டெல்லியிலும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு நடந்தது. தொடர்ந்து, 3-வது கட்டமாக மீண்டும் சென்னையில் படப்பிடிப்பை நடத்தி முடித்த படக்குழு,  4-வது கட்ட ஷூட்டிங்கிற்காக கர்நாடகாவில் முகாமிட்டுள்ளது.

இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் அவர் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். இதற்காக மக்கள் செல்வன் சிவமோகா வந்துள்ள தகவலை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள், ஓட்டல் முன்பு குவிய ஆரம்பித்தனர். 

அதில் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகர் ஒருவருக்கு இன்று பிறந்தநாளாம், மக்கள் செல்வன் தனக்கு பிறந்தநாள் கேக் ஊட்டி விட வேண்டும் என்று ஆசைப்பட்ட அந்த நபர், விஜய் சேதுபதியைக் காண கையில் கேக்குடன் வந்திருந்தார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, அந்த ரசிகரை அழைத்து பிறந்தநாள் கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தார். 

ஷூட்டிங்கிற்கு செல்வதற்காக பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்த போதும், தனது தீவிர ரசிகருக்காக முகம் சுளிக்காமல் விஜய் சேதுபதி செய்த காரியம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த மக்கள் செல்வனின் ஃபேன்ஸ் செம்ம ஹாப்பி அண்ணாச்சி....!
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடிபொலியாக இருந்ததா குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ்...? முழு விமர்சனம் இதோ
துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது