தொட்டது எல்லாம் பொன்னாகும் வீடு; பிக் பாஸ் தமிழ் சீசன் 9 லோகோ கொண்ட உடையில் விஜய் சேதுபதி!

Published : Oct 05, 2025, 06:50 PM IST
Vijay Sethupathi Bigg Boss Tamil Season 9 Grand Launch

சுருக்கம்

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இதில் சீசன் 9 லோகோ கொண்ட உடையில் விஜய் சேதுபதி தொடக்க விழாவில் பங்கேற்றார்.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 பிரம்மாண்டமாய் தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒரு போட்டியாளர்களுக்கு இது ஒரு வாய்ப்பு. ஒரு சிலருக்கு அவர்களது வாழ்வில் ஏற்றத்தை தரும் ஒரு ஏணி என்று ஆரம்பித்த விஜய் சேதுபதி ஒரு குட்டி ஸ்டோரி ஒன்றையும் கூறினார். அதாவது மலை என்று ஒன்று இருந்தால் மலை உச்சியும் இருக்கும், மலையடி வாரமும் இருக்கும். இந்த மலை உச்சிக்கு சென்றால் தான் உயர முடியும்.

தமிழக அரசுக்கு அஜித் செய்த உதவி! நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!

இந்த நிகழ்ச்சி ஒரு மலை. போட்டியாளர்களாலும், பார்வையாளர்களாலும் தான் இந்த நிகழ்ச்சி மென்மேலும் வளரும் என்று கூறி வீட்டை சுற்றிக் காட்டினார். பிக்பாஸ் வீட்டில் மொத்தமாக பெட்ரூமில் 12 பெட் தான் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர கேப்டனுக்கு ஒரு ஃபெட் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த சீசனில் கிச்சனாக இருந்த பிக் பாஸ் வீடு இந்த சீசனில் லிவிங் ரூமாக மாற்றப்பட்டுள்ளது.

அதோடு கிச்சன் நடு ஹாலுக்கு மாற்றப்பட்டுள்ளது. கார்டன் ஏரியாவும் மாற்றப்பட்டுள்ளது. அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகள், ராஜா, ராணிகள் போன்ற உருவங்கள் பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்போது பிக் பாஸ் வீட்டை பார்க்கும் போது டூரிஸ்ட் அதாவது சுற்றுலா தலமாக காட்சி தருகிறது. வீட்டில் ஒவ்வொரு ஏரியாவும் ஒவ்வொரு கதை சொல்லும் வகையில் பிக் பாஸ் வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டின் நுழைவு முதல் உள்ளே லிவிங் ஏரியா, கார்டன் ஏரியா, கன்பெஷன் ஏரியா, கிச்சன் ஏரியா என்று எல்லாமே மாற்றப்பட்டுள்ளது.

அய்யோ பாவம்... பிரியங்கா மோகனை நசுக்கி தள்ளிய கூட்டம்! விஜய்யை வெச்சு செய்த நெட்டிசன்கள்!

இதை பார்க்கும் போது பாக்க பாக்க புரியும், போக போக தான் தெரியும் என்று பிக் பாஸ் கூறினார். எது எப்படியோ இந்த சீசன் பார்வையாளர்களுக்கும் சரி, போட்டியாளர்களுக்கும் சரி சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் முதல் போட்டியாளர்:

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் கலந்து கொண்டுள்ளார். வாட்டர்மெலனே அவருக்கு இந்த அடையாளத்தை கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர் பதில் சொன்ன விதம் தனக்கு ரொம்ப பிடித்திருந்ததாகவும் விஜய் சேதுபதி குறிப்பிட்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்த வீட்டிற்குள் உங்களது விளையாட்டை ஆடுவதற்கான முடிவாக நீரும், நெருப்பும் என்று என்று பாக்ஸ் வைக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் எடுக்கும் பேட்ஜை பொறுத்து தான் அவர்களது போட்டி ஆரம்பமாகும். அதன்படி பிக்பாஸ் வீட்டின் முதல் போட்டியாளரான வாட்டர்மெலன் ஸ்டார் சிகப்பு நிறம் கொண்ட பாக்ஸை எடுத்தார்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

மாட்டிக்கிட்டோம் என்று தெரிந்து நாடகமாடிய தங்கமயில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுத சரவணன் : கூலா வேடிக்கை பார்த்த மயில்!