26 வயது நடிகையை விஜய்காக தேடி பிடித்த அட்லி..! யார் தெரியுமா அவர்..?

By manimegalai aFirst Published Sep 2, 2018, 5:33 PM IST
Highlights

வரிசையாக விஜயை வைத்து ‘தெறி’, ‘மெர்சல்’ என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் அட்லி. மூன்றாவது முறையாக விஜயின் இணைந்து 63-ஆவது படத்தை எடுக்க உள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.

வரிசையாக விஜயை வைத்து ‘தெறி’, ‘மெர்சல்’ என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் அட்லி. மூன்றாவது முறையாக விஜயின் இணைந்து 63-ஆவது படத்தை எடுக்க உள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதுவரை, இந்த படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் யார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகாத நிலையில் இந்த படத்திற்கு இசைபுயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் புதிய நடிகையை தான் நடிக்க வைக்க வேண்டும் என உறுதியாக உள்ளாராம் அட்லி. 

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான “தோனி தி அன் டோல்ட் ஸ்டோரி ” என்ற படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த கியரா அட்வானியிடம் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை பிரபல பத்திரிகை ஒன்று விசாரித்தபோது, கியரா அட்வனியிடம் ஹீரோயினாக கமிட் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக தெரியவந்துள்ளது.

26 வயதே ஆன கியரா அட்வானி, இந்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான 'புக்லி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் 'தோனி', 'மெஷின்' போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் நடிகர் மகேஷ் பாபு நடித்து தெலுங்கில் வெளியான ‘பாரத் அனே நேனு ' படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.  

இவருக்கு தமிழில் முதல் படமே இளைய தளபதியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா? இல்லை வேறு நாயாகி இந்த படத்தில் நடிப்பாரா..? என பொறுத்திருந்து பார்ப்போம். 

click me!