சென்னையில் உலக சாதனை நிகழ்வாக நடத்தப்பட இருந்த நடன நிகழ்ச்சி தோல்வியில் முடிந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் கடும் கோபம் அடைந்தனர்.
சர்வதேச நடன தினத்தையொட்டி நடன இயக்குனரும் நடிகருமான பிரபுதேவாவின் 100 பாடல்களை 100 நிமிடம் இடைவிடாது நடனமாடி உலக சாதனை படைக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர் மற்றும் நடனக் கலைஞர்கள் நடனமாட வந்திருந்தனர். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் வைத்து இந்த உலக சாதனை நிகழ்வு நடைபெறுவதாக இருந்தது.
இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. இதில் நடனப்புயல் பிரபுதேவாவும் கலந்துகொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியை காலை 6 மணிக்கு தொடங்கி 7.30 மணிக்கு முடிக்க முடிவு செய்யப்பட்டு, இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தவர்களிடம் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி காலை 9 மணியாகியும் தொடங்கப்படாததால் அங்கிருந்த பெற்றோர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினர்.
இதையும் படியுங்கள்... ஒரே வருடத்தில் ரூ.400 கோடி வருமானம்... சினிமாவில் இருந்து விலகி பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் பிரபல நடிகை
குறிப்பாக காலை 5 மணியில் இருந்து காத்திருக்கும் சிறுவர், சிறுமியருக்கு உணவு போன்ற அடிப்படை வசதிகளை செய்துகொடுக்காமல், தண்ணீர் மட்டுமே கொடுத்ததாகவும் கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பின்னர் அவசர அவசரமாக அந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பிரபுதேவா உடல்நிலை சரியில்லாததால் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. பின்னர் வீடியோ கால் வாயிலாக கலந்துகொண்ட அவர் அந்நிகழ்ச்சியை கண்டுகளித்தார்.
வீடியோ கால் வாயிலாக பேசுகையில் அங்கிருந்த பெற்றோர்கள் மற்றும் சிறுவர், சிறுமியர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரபுதேவா, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தன்னால் வர முடியவில்லை என கூறி வருத்தம் தெரிவித்த அவர், இந்த தாமதம் காரணமாக ஏராளமானோர் பாதியிலேயே வீட்டிற்கு சென்றுவிட்டதால், இது உலக சாதனை நிகழ்ச்சியாக நடைபெறாமல், எஞ்சியுள்ளவர்களை வைத்து பிரபுதேவாவிற்கான அர்ப்பணிப்பு நிகழ்வாக நடந்து முடிந்தது.
இதையும் படியுங்கள்... Janhvi Kapoor : சென்னையில் நடிகை ஸ்ரீதேவி வாங்கிய முதல் வீடு... முதன்முறையாக வாடகைக்கு விடுகிறார் ஜான்வி கபூர்