Snehan : லேடி சூப்பர் ஸ்டாருக்கு போட்டி வந்தாச்சு? புது பிசினஸில் களமிறங்கும் ஜோடி - கலக்கும் கன்னிகா சினேகன்!

Ansgar R |  
Published : May 02, 2024, 09:20 AM IST
Snehan : லேடி சூப்பர் ஸ்டாருக்கு போட்டி வந்தாச்சு? புது பிசினஸில் களமிறங்கும் ஜோடி - கலக்கும் கன்னிகா சினேகன்!

சுருக்கம்

Lyricist Snehan : தஞ்சையில் பிறந்து, தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் அதிகமான பாடல்களை எழுதி மிகச் சிறந்த பாடலாசிரியராக திகழ்ந்து வருபவர் தான் சினேகன். இவர் நடிகராகவும் அரசியல் தலைவராகவும் பயணித்து வருகிறார்.

தஞ்சாவூரில் கடந்த 1978 ஆம் ஆண்டு பிறந்த பாடலாசிரியர் சினேகன், கடந்த 1997 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "புத்தம் புது பூவே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக தமிழ் திரை உலகில் களமிறங்கினார். கடந்த 2001 ஆம் ஆண்டு பாண்டவர் பூமி என்கின்ற திரைப்படத்தில் ஒளிபரப்பான "தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்" என்கின்ற பாடல் மூலம் தமிழ் திரை உலகில் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். 

ஆனால் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது சாமி திரைப்படத்தில் வந்த "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா" என்கின்ற பாடல் என்றால் அது மிகையல்ல. தொடர்ச்சியாக தமிழ் திரை உலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த பாடலாசிரியராகவும், நடிகராகவும் பயணித்து வரும் அவர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களோடு இணைந்து அவருடைய மக்கள் நீதி மையம் கட்சியில் ஒரு அரசியல்வாதியாகவும் பயணித்து வருகிறார். 

Uma Ramanan : நிழல்கள் முதல் திருப்பாச்சி வரை - பாடகி உமா ரமணன் குரலில் சூப்பர் ஹிட்டான டாப் 5 பாடல்கள்!

கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகை கன்னிகா ரவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் "சினேகம் ஹெர்ப்ஸ்" என்கின்ற ஒரு புதிய பிராண்ட் ஒன்றை தனது மனைவி கன்னிகாவோடு இணைந்து அவர் துவங்கி இருக்கிறார். இது ஒரு ஹெர்பல் ஹேர் ஆயில் பிராண்ட் ஆகும். இந்த எண்ணெய் இப்பொது விற்பனைக்கு வந்துள்ளது.

ஏற்கனவே பிரபல நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அழகு சாதன பொருட்களை தனது நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது நடிகர் சினேகன் தனது மனைவியோடு இணைந்து ஒரு புது தொழிலில் ஒன்றை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.  

Dheena & Billa: ரீ-ரிலீஸில் கில்லி பட வசூலில் பாதிகூட கிடைக்கலயா? பாக்ஸ் ஆபிஸில் பரிதாப நிலையில் அஜித் படங்கள்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மம்மூட்டியின் ‘களம்காவல்’ மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
வேட்டியே அவிழும் அளவுக்கு ஆட்டம் போட்டபடி இளையராஜா கம்போஸ் பண்ணிய ஜாலியான பாடல் பற்றி தெரியுமா?