
கடந்த 2006 ஆம் ஆண்டு வெறும் 20 வயது மட்டுமே நிரம்பிய பிரபல நடிகை குட்டி ராதிகா, தன்னைவிட 27 வயது அதிக வயதுடைய 47 வயதான முன்னாள் முதல்வர் குமாரசாமி அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார். அதுவும் குறிப்பாக அவரது பெற்றோரின் எதிர்ப்பை மீறி அவர் அந்த திருமணத்தை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
1986 ஆம் ஆண்டு, அதாவது நடிகை குட்டி ராதிகா பிறந்த அதே ஆண்டு முன்னாள் முதல்வர் எச்.டி குமாரசாமி தனது முதல் திருமணத்தை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல கடந்த 2000 ஆவது ஆண்டு ரத்தினகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை குட்டி ராதிகா ஓரிரு வருடங்களில் அவரை பிரிந்தார்.
எச்.டி.குமாரசாமிக்கு தன் மகளை திருமணம் செய்து வைப்பதை ராதிகாவின் தந்தை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ராதிகா அவரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் நீண்ட நாட்களாக தங்கள் திருமணத்தை ரகசியமாக வைத்திருந்தனர். கர்நாடக முன்னாள் முதல்வருடன் மகளின் திருமணம் குறித்த செய்தியால் அவரது தந்தை மிகவும் அதிர்ச்சியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகையாக கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வந்தாலும் அவருடைய சினிமா வாழ்க்கை பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. இரு திரைப்படங்களை தயாரித்து அவர் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்த பிறகு அவர் பல தொழில்களில் தற்பொழுது முன்னேற்றம் அடைந்து வருகிறார். தற்பொழுது ராதிகாவின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 124 கோடி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.