
இன்று செங்கல்பட்டு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, சித்தாமூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சியில் மழை மற்றும் "மிக்ஜாம்" புயலில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொது செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்து நேரடியாக சென்று மேற்பார்வையிட்டு அரிசி, தார்பாய், பிரெட் பாக்கெட், பால் பாக்கெட், பிளாஸ்டிக் பாய், பெட்ஷீட், ஸ்டவ் போன்ற அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்கினார்.
சுமார் 150 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, 15 வீடுகளுக்கு தார்பாய், 200 நபர்களுக்கு பிரெட் பாக்கெட், 200 நபர்களுக்கு பால் பாக்கெட், 50 நபர்களுக்கு பிளாஸ்டிக் பாய், 50 நபர்களுக்கு பெட்ஷீட், 5 நபர்களுக்கு ஸ்டவ் போன்றவை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிச்சுக்கு செங்கல்பட்டு மாவட்ட தலைவர் திரு.சூரிய நாராயணன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மற்றும் செங்கல்பட்டு மாவட்ட தொண்டரணி தலைவர் திரு.M.S.பாலாஜி, செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் திரு.மோகன்ராஜா, சித்தாமூர் ஒன்றிய தலைவர் திரு.அருள் மற்றும் நகரம், ஒன்றியம், பகுதி, கிளை மக்கள் இயக்க நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். மேலும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பல இளைஞர்கள் தொடர்ந்து... மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.