பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ் மேட்ஸ் பொம்மையாக மாறி விளையாடி வரும் நிலையில்... மிகவும் மனம் நொந்து நான் வீட்டுக்கு போகிறேன் என விசித்ரா உடைந்து அழுகிறார். இதுகுறித்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
பொதுவாக பிக்பாஸ் வீட்டில், 40 வயதை தாண்டிய பிரபலங்கள் தாக்கு பிடிப்பது என்பது மிகவும் கடினம். ஆனால் மிகவும் திறமையாக விளையாடி... ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள விசித்ரா கண்டிப்பாக ஃபைனலிஸ்ட்டில் ஒருவராக இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளுக்கு நாள் பிக்பாஸ் போட்டி கடுமையாகி வந்தாலும்... தன்னால் முடிந்தவரை அதற்க்கு ஈடு கொடுத்து விளையாடி வருகிறார். ஆனால் கடந்த இரண்டு வாரங்களாகவே விசித்ரா அடிக்கடி வீட்டுக்கு செல்ல வேண்டும் என கூறுவதோடு, மன உளைச்சலில் உடைந்து அழுவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், அர்ச்சனா... விசித்ராவிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது ஒருவரிடம் பொம்மையாக சிக்கி விட்டால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருக்கிறதா? தேவையே இல்லாமல் உன்ன பத்தி சொல்லு, அவங்கள பத்தி சொல்லு என கூறுகிறார். அதே போல் விஷ்ணு ஒருவரை அசிங்க படுத்துவது தான் இந்த டாஸ்கா என கேட்கிறார். மாயா ஒருபக்கம் பூர்ணிமாவிடம், பயங்கரா காண்டா இருக்கு என்று சொல்ல, அந்த காண்டு விட்டு போய் விட கூடாது என்பதால் நான் வச்சு செய்தேன் என கூறுகிறார் பூர்ணிமா.
இதை தொடர்ந்து பேசும் அர்ச்சனா... இருக்குறதுலேயே அவங்கள நான் தான் அதிகம் ஹட் பண்ணுனேன் என கூற, இதற்க்கு விசித்ரா நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விரும்புகிறேன் என கூறி அழுகிறார். இதோடு இந்த புரோமோ முடிந்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது... இந்த டாஸ்க் மூலம் தங்களின் வெறுப்பை வெளிப்படுத்தியது தெரிகிறது.
மூன்றாவது புரோமோவில், அர்ச்சனாவிடம் தினேஷ்... ரவீனா பொம்மை பற்றி நீ சொல்லவேண்டும் என கேட்க, இந்த பொம்மை ஓவரா துள்ளுற பொம்மை. கடைசி வரைக்கும் அவங்க தப்ப அவங்க உணரவே மாட்டாங்க என சொல்கிறார். கூல் சுரேஷ் பற்றி கேட்கும் போது... எல்லாருக்கும் நல்லவங்களா இருக்க முடியாது என தெரிவிக்கிறார். விசித்ராவை பற்றி பேசும் போது... இந்த பொம்மை எப்போதும் கேமரா கான்ஷியஸாக இருக்க கூடிய பொம்மை என தெரிவிக்கிறார். விஷ்ணுவை பற்றி கூறும் போது... அவருக்கு வேண்டும் என்றால் கேங் சேருவார், வேண்டாம் என்றால் பிரிந்து விடுவார் என கூறுகிறார். இந்த புரோமோவும் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.