தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி ஷண்முகத்துக்கு தெரியாமல் அல்வாவை எடுத்து சாப்பிட்டு சிக்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ஸ்கூலில் ரத்னா கிளாசுக்கு செல்ல அப்போது அவளை ஒரு வாத்தியார் கடந்து செல்லும் போது அவரிடம் வெங்கடேஷ் உங்க ஏரியா தானே, ஒரு வாரமா ஸ்கூல் வரலையே, என்ன காரணம்னு தெரியுமா என்று கேட்க அவர் தெரியாது என்று சொல்லி விடுகிறார், வாட்ச் மேனிடம் கேட்க அவரும் தெரியாது என்று சொல்ல ஸ்கூல் ஹெட் மாஸ்டரிடம் கேட்க வெங்கடேஷ் ரிசைன் செய்து விட்டு வேறு ஊருக்கு சென்று விட்டதாக விஷயத்தை சொல்ல ரத்னா அதிர்ச்சி அடைகிறாள்.
இதே அதிர்ச்சியில் கிளாஸ் ரூமுக்குள் வந்து அமர பெல் அடித்ததும் எல்லாரும் கிளம்பி விட ரத்னா சேரில் அப்படியே கண்ணீருடன் உறைந்து போய் கிடக்க செக்யூரிட்டி இதை கவனிக்காமல் கதவை பூட்டி விட்டு கிளம்பி விட ரத்னா சத்தம் போட்டும் அவர் காதில் கேட்காமல் போகிறது.
அதன் பிறகு கனி வீட்டிற்கு போக அங்கும் ரத்னா இல்லாததால் ஷாக்காக எல்லாரும் ரத்னாவை காணவில்லை என பதறுகின்றனர். வைகுண்டம் முத்துபாண்டியால் ஏதாவது ஆபத்து வந்திருக்குமோ என பயப்படுகிறார். பரணி ஸ்கூலில் தேடி பார்க்கலாம் என சொல்ல எல்லாரும் கிளம்பி வருகின்றனர். ரத்னாவுக்கு போன் செய்ய அந்த போன் ஸ்டாப் ரூமில் ரிங்காக ரத்னா ஸ்கூலில் தான் இருக்கிறாள் என்பதை உறுதி செய்து கொள்கின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.