புஸ்ஸி ஆனந்துக்கு உடல்நலக்குறைவு... நள்ளிரவே மருத்துவமனைக்கு விரைந்த நடிகர் விஜய்..!

நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் மாநில பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் இருந்து வருகிறார். விஜய்யின் அரசியல் பிரவேசம் தொடர்பாக அவ்வப்போது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். 


விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் மாநில பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் இருந்து வருகிறார். விஜய்யின் அரசியல் பிரவேசம் தொடர்பாக அவ்வப்போது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ  படத்தின் வெற்றி விழா முன்னெற்பாடுகளை தொடர்ந்து கவனித்து கொண்டு வந்தார்.

Latest Videos

இதையும் படிங்க;- "பையனுக்கு அப்பா மாதிரி ஆகணும்னு கனவு.. தப்பேயில்லை".. பொடிவச்சு பேசினாரா தளபதி விஜய்? யார பத்தி பேசிருப்பாரு?

இந்நிலையில், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து உடனே அவர் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை அறிந்த நடிகர் விஜய் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

இதையும் படிங்க;- Super Star விவகாரம்.. "ஒரே ஒருத்தர்தான் சூப்பர் ஸ்டார்" சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்

click me!