இதல்லவா நட்பு... கமலின் ‘இந்தியன் 2’ படத்துக்கு உதவ முன்வந்த ரஜினிகாந்த்

By Ganesh A  |  First Published Nov 2, 2023, 3:40 PM IST

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்தியன் 2 படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய உதவி செய்துள்ளார்.


கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு வெளிவந்த மாஸ்டர் பீஸ் திரைப்படம் தான் இந்தியன். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 27 ஆண்டுகளுக்கு பின் அதன் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இப்படத்திலும் கமல்ஹாசன் தான் நயகனாக நடித்துள்ளார். இதில் கமலுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியன் 2 படத்தை அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில், வருகிற நவம்பர் 7-ந் தேதி நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட உள்ளதால், அதையொட்டி நவம்பர் 3-ந் தேதி இந்தியன் 2 படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில். அதை வெளியிட உள்ள பிரபலம் பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி இந்தியன் 2 படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும், தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாருமான நடிகர் ரஜினிகாந்த் தான் ரிலீஸ் செய்ய உள்ளார். நாளை மாலை 5.30 மணிக்கு ரஜினிகாந்த், இந்தியன் 2 படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிடுவார் என படக்குழுவே போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Their friendship that grew over the years has only got stronger with time! 🤗✨ 🤩

'Superstar will release 'Ulaganayagan' & 's INDIAN-2 AN INTRO tomorrow at 5:30 PM 🕠 🇮🇳 … pic.twitter.com/SumRpTnKEH

— Lyca Productions (@LycaProductions)

இதையும் படியுங்கள்... 200 கோடியில் அரண்மனை போல் வீடுகட்டி ராஜவாழ்க்கை வாழும் ‘பாலிவுட் பாட்ஷா’ ஷாருக்கானின் சொத்து மதிப்பு இவ்வளவா?

click me!