அரசியல் கால் பதித்துள்ள தளபதி விஜயை, 2026-ல் தமிழகத்தின் முதல்வராகியே தீர வேண்டும் என புஸ்ஸி ஆனந்து கட்சி தொண்டர்கள் முன்பு பேசிய வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அரசியல் கால் பதித்துள்ள தளபதி விஜயை, 2026-ல் தமிழகத்தின் முதல்வராகியே தீர வேண்டும் என புஸ்ஸி ஆனந்து கட்சி தொண்டர்கள் முன்பு பேசிய வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கோலிவுட் திரையுலகில் வசூல் மன்னனாகவும், 100 கோடிக்கு மேல் சம்பளம் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய், கடந்த சில வருடங்களாக அரசியல் பற்றி பேசி வந்தாலும், திடீர் என தன்னுடைய கேரியரை விட்டு வெளியேறி, முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறியது யாரும் எதிர்பாராத ஒன்றாகவே உள்ளது. விஜய்யின் இந்த அதிரடி செயலை பார்த்து, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ரஜினி - கமலுடன் ஒப்பிட்டு தளபதியை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.
undefined
காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினியாக்ந்த கடந்த 25 வருடமாகவே அரசியலுக்கு இதோ வருகிறேன்... அதே வருகிறேன் என போக்கு காட்டியது மட்டும் இன்றி, அரசியல் குறித்து அறிக்கை உள்ளதாக தெரிவித்த இரு தினங்களுக்கு முன்பு, அரசியல் தனக்கு சரி பட்டு வராது என கூறி, ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஏமாற்றியவர். ரஜினி அரசியலுக்கு வராததன் காரணம் அவரின் உடல்நிலை என்பது... ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றாக இருந்தாலும் கூட, ரசிகர்களின் எதிர்பாப்பும் ஏக்கமும் சுக்குநூறானது.
விஜய் அரசியல் கட்சி குறித்து அறிவித்த பின்னர்... முதல் முறையாக நடந்த பனையூரில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதோடு, விஜய் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் ரசிகர்களை சந்தித்ததாக தெரிகிறது. புஸ்ஸி ஆனது, ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில்... அவர் பேசியபோது, 2026-ல் தளபதியை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என பேசியுள்ளார்.
இந்த வீடியோவில் தொடர்ந்து பேசியுள்ள புஸ்ஸி ஆனந்த், "உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பில் தான் எல்லாமோ இருக்கிறது. இதற்கு முன்பு நாம் எந்த மாதிரி இருந்தோம், என்பது வேறு இதற்கு மேற்பட்டு தலைவர் என்ன சொல்கிறாரோ அதை தான் செய்ய போகிறோம். தலைவர் என்கிற பதவி இனி யாருக்கும் இல்லை. 2026-ல் முதலமைச்சராக தலைவரை நாம் அமர வைக்கவேண்டும் என பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.