ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் லால் சலாம் படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 9 ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குனராக ரீ-எண்ட்ரி கொடுத்துள்ள திரைப்படம் தான் லால் சலாம். இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்கிற கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். மேலும் அவருடன் விஷ்ணு விஷால், நிரோஷா, விக்ராந்த், ஜீவிதா, செந்தில், தங்கதுரை என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. லைகா நிறுவனம் சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.
undefined
லால் சலாம் திரைப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழகத்தில் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்தும் நடித்துள்ளதால் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை லால் சலாம் படம் பூர்த்தி செய்ததா என்பதை டுவிட்டர் விமர்சனம் மூலம் விரிவாக காணலாம்.
இதையும் படியுங்கள்... செந்தில் முதல் எவர் கிறீன் நாயகி நிரோஷா வரை.. லால் சலாம் Press Meet - மேடையை அலங்கரித்த ஸ்டர்ஸின் கூல் Clicks!
லால் சலாம் படத்தின் முதல் பாதி முழுவதும் எமோஷனல் காட்சிகள் நிறைந்ததாக உள்ளது. ரசிகர்களுக்கான மாஸ் மொமண்ட் என்பது குறைவு தான். இப்படம் முழுக்க முழுக்க பேமிலி ஆடியன்ஸுக்கான படம். குறிப்பாக கிரமாப்புர ஆடியன்ஸை இப்படம் வெகுவாக கவரும். முதல்பாதியில் ரஜினிகாந்த் வெறும் 15 நிமிடம் மட்டுமே வந்தாலும், அது சிறப்பாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
first half done. Full of emotions and less fans moments.. Purely for the family audience and will connect well with the rural audiences, especially the down south.
Thalaiavar appearance only 15 mins in first half but best 💥💥 pic.twitter.com/ZQCPwe503m
லால் சலாம் படத்தின் இரண்டாம் பாதி படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது. ரஜினிகாந்தை திறம்பட பயன்படுத்தி இருக்கிறார்கள். அவருக்கு இது சரியான கதாபாத்திரம். மொத்தத்தில் லால் சலாம் நல்ல படமாக அமைந்துள்ளது. என குறிப்பிட்டுள்ளார்.
2nd Half took the movie to a different level 🔥🔥. They used effectively and rightly. good watch
— Karthik (@meet_tk)லால் சலம் படத்தின் இரண்டாம் பாதி படத்தின் தரத்தை உயர்த்தி உள்ளது. இப்படத்தின் கிளைமேக்ஸ் பேசுபொருளாக இருக்கும். மொத்தத்தில் வேறலெவல் படம். இப்படத்தில் குறை சொல்ல ஒரு இடம் கூட இல்லை. ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
2nd Half increased the standards ✅
Climax will be talk of the town
Overall, Vere Level Film 🔥🔥🙏
Not even a single flaw to point
Kudos to 👏👏 pic.twitter.com/8wyJ3JXUsz
ஒரு வார்த்தையில் லால் சலாம் படம் பற்றி சொல்லவேண்டும் என்றால் வாவ் என சொல்லலாம். என்ன ஒரு அருமையான படம். ஐஸ்வர்யாவுக்கு பாரட்டுக்கள். ரஜினிகாந்த் திரையில் தோன்றினாலே தெறிக்குது. அவர் ஒரு காட்பாதர். இப்படத்திற்கு தேசிய விருது கண்டிப்பா கிடைக்கும் என பாராட்டி பதிவிட்டுள்ளார்.
one word- (4.75/5) wow wow what a movie 💥💥💥🏆🏆 🏆Hats off 👏👏🏆🏆 and one and only and 💥💥💥👏👏what a Godfather of screen presence.💥💥👏👏🏆🏆 and sure👍 pic.twitter.com/P28cIndzhA
— M.Rajeevkaran (@rajeevkaran)லால் சலாம் படத்தின் முதல் பாதி நன்றாகவும், இரண்டாம் பாதி அருமையாகவும் இருப்பதாக நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
FIRST HALF GOOD
SECOND HALF BRILLIANT 🥵
pic.twitter.com/IR5exbYoDp
லால் சலாம் பவர்புல்லான கதை, ஆனால் அதை சொன்ன விதம் பவர்புல்லாக இல்லை. சூப்பர்ஸ்டார் கேமியோனு சொல்ல முடியாது. நிறைய காட்சிகளில் வருகிறார். விஷ்ணு மற்றும் விக்ராந்தின் நடிப்பு நன்றாக உள்ளது. ஆனால் கதாபாத்திரங்கள் தேர்வு சரியில்லை. படத்தில் எமோஷனல் கனெக்ட் மிஸ் ஆகிறது. மொத்தத்தில் லால் சலாம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என பதிவிட்டுள்ளார்.
- 🙏
Powerful Subject, Powerless Narration. Superstar more than extended cameo, Vishnu - Vikranth Neat. Sadly Poor Characterization. Scattered scenes & Abrupt Edits. Emotional Connect is missing. DISAPPOINTMENT!
லால் சலாம் படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், கதை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. இண்டவெல் பிளாக் அனல்பறக்குது. ரஜினி ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் ஆக இருக்கும். ஒளிப்பதிவு அருமை. முதல் பாதி சூப்பர். ஆனால் இரண்டாம் பாதியில் எமோஷன் சுத்தமாக கனெக்ட் ஆகவில்லை. ரஜினிகாந்த் இருந்தும் இரண்டாம் பாதியை காப்பாற்ற முடியவில்லை. பின்னணி இசை சொதப்பல். விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷாலின் நடிப்புக்கு கைதட்டல் கொடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
Second Half - Emotional didn't connect flat and slow Even Rajinikanth screen presence can't save. Bgm absolutely 👎 👎 Vikranth and Vishnu deserves 👏👏👏 2.5/5 One time watchable https://t.co/2IJm7GkArx
— Santhosh (@sansofibm)இதையும் படியுங்கள்... இந்த முறை இளைய மகளுக்காக.. மீண்டும் கேமியோ கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்? - தீயாய் பரவும் தகவல்!