கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் விமர்சனத்தை பார்க்கலாம்.
இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் சிங்கப்பூர் சலூன். இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி செளத்ரி நடித்துள்ளார். தற்போது விஜய் நடிக்கும் கோட் படத்திலும் இவர்தான் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் ரோபோ சங்கர், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
சிங்கப்பூர் சலூன் திரைப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்து உள்ளனர். லோகேஷ் கனகராஜ், ஜீவா, அரவிந்த் சாமி ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படம் ஒன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களுடைய விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
undefined
இதையும் படியுங்கள்... சினிமா ஹீரோயினை காதலித்து கரம்பிடித்த விஜய் டிவி சீரியல் ஹீரோ பிரேம் - வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்
சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் முதல் பாதி காமெடியாகவும், இரண்டாம் பாதி எமோஷனலாகவும் இருந்தது. ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார். சத்யராஜ் காமெடி அல்டிமேட் ஆக உள்ளது. அரவிந்த சாமியின் கேமியோ தியேட்டரில் தெறிக்கிறது. கிஷன் தாஸின் பங்களிப்பும் அருமை. புதுவிதமாக முயற்சித்துள்ளார் இயக்குனர் கோகுல் என பதிவிட்டுள்ளார்.
[3.25/5] :
1st Half - Comedy.. 2nd Half - Inspirational.. has underplayed his character.. Very subtle.. 's comedy is ultimate.. 's cameo is a major theater moment.. has supported well.. has…
புதுவிதமான கதை வழக்கமான திரைக்கதை உடன் சொல்லி உள்ள விதம், சத்யராஜ் மற்றும் ரோபோ சங்கரின் காமெடி, ஆ.ஜே.பாலாஜியின் நடிப்பு ஆகியவை படத்திற்கு பலமாக அமைந்துள்ளன. அதே வேளையில், கணிக்கும் படியான திரைக்கதை, உத்வேக காட்சிகள் ஆகியவை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
Review:
Positives:
*Unusual Story with As usual Screenplay
*Sathyaraj & Robo Shankar Comedy combo Served laughter Easily
* Subtle Acting
To be made better:
*Predictable screenplay
* Some Motivational scenes
Overall a Decent Entertainer ♥️ pic.twitter.com/yUzWsDE50b
சிங்கப்பூர் சலூனின் முதல் பாதி ஃபன் ஆகவும், இரண்டாம் பாதி எமோஷனலாகவும் உள்ளது. சிம்பிளான கதையை நீட்டாக எழுதியிருக்கிறார். ஆர்.ஜே பாலாஜி அடக்கி வாசித்தாலும், படம் முழுக்க கவனம் ஈர்க்கிறார். அரவிந்த் சாமியின் கேமியோ மனதை தொடும் விதமாக உள்ளது. மொத்தத்தில் டீசண்ட் ஆன பேமிலி எண்டர்டெயினர் என குறிப்பிட்டு உள்ளார்.
- First Half is totally fun and second half is loaded with emotions. A very simple plot laced with neat writing. underplays throughout the film and yet gains our attention. Aravind Swamy cameo is touching. Overall, a decent family entertainer. pic.twitter.com/Jv8Eb1MFVO
— Richard Mahesh (@mahesh_richard)சிங்கப்பூர் சலூன் படத்தின் முதல் பாதி காமெடி நிறைந்ததாக இருந்தது. 2கே கிட்ஸ் காட்சிகள் வேறலெவல். ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் முன்னேற்றம் அடைந்துள்ளார். சத்யராஜ் படத்திற்கு பலம். கிஷன் தாஸ் கவனிக்க வைத்துள்ளார். எமோஷனலாக உள்ள இரண்டாம் பாதி சற்று டக் அடிக்கிறது. பின்னணி இசை மற்றும் பாடல்கள் அருமை. என பதிவிட்டு உள்ளார்.
✂️Hilarious & Fun Filled 1st Half
✂️2 Kids Scenes Vera Level
✂️ Acting Improved lot ✌🏻
✂️ Back Bone 😂
✂️ Impressive
✂️Emotional & Story Oriented 2nd Half
✂️2nd Half Slightly Lagging
✂️BGM & Songs Good ❤️
✂️OverAll… https://t.co/Cn1tJ0UBBd pic.twitter.com/MiFo9UU4ml
இதையும் படியுங்கள்... பைனலில் அர்ச்சனாவுக்கு 19 கோடி ஓட்டு கிடைத்ததா? வாய்ப்பே இல்ல... இது கன்பார்ம் மோசடி - புயலை கிளப்பிய பிரபலம்