
நடிகர் தனுஷும் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு பின் மனைவியை இயக்குனராக்கி அழகுபார்த்த தனுஷ், அவரின் முதல் படமான 3-ல் ஹீரோவாக நடித்தார். அதுமட்டுமின்றி ஐஸ்வர்யாவின் இரண்டாவது படமான வை ராஜா வை படத்திலும் கொக்கி குமாராக கேமியோ ரோலில் வந்து மாஸ் காட்டி இருந்தார்.
ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டபின் தனுஷின் சினிமா கெரியரில் உச்சத்துக்கு சென்றது. இவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இருமுறை வாங்கி இருந்தார். அதுமட்டுமின்றி பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகில் அறிமுகமாகி மாஸ் காட்டினார். இப்படி தனுஷின் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றிய ஐஸ்வர்யா, கடந்த 2022-ம் ஆண்டு திடீரென ஒரு அதிர்ச்சி முடிவை எடுத்தார். அது தான் விவாகரத்து.
இதையும் படியுங்கள்... ராக்கி பாய்-ஐ போல் மாஸ் காட்டினாரா மொய்தீன் பாய்? லால் சலாம் படத்தின் விமர்சனம் இதோ
தானும் தனுஷும் விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக அறிவித்தார். தனுஷும் இதை தன் சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தினார். பின்னர் குடும்பத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் இருவரும் விவாகரத்து முடிவை கைவிட்டனர். தற்போது தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஐஸ்வர்யா உடனான பிரிவுக்கு பின்னரும் தனுஷுக்கு ரஜினி மீதான பாசம் என்பது குறையவே இல்லை. இதற்கு காரணம் ரஜினியின் தீவிர ரசிகர் அவர்.
ரஜினி படங்களை தவறாமல் FDFS பார்க்கும் பழக்கம் கொண்ட தனுஷ், கடைசியாக வெளியான ஜெயிலர் படம் வரை அதை பாலோ செய்து வந்தார். இந்த நிலையில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அப்படம் குறித்து நடிகர் தனுஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவுக்கு மறைமுகமாக தன் அன்பை வெளிப்படுத்தி இருப்பதாக கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு சலாம்... வீல் சேரில் அமர்ந்திருக்கும் அன்சீன் புகைப்படத்துடன் ரஜினி வாழ்த்து
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.