
கோலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திர பட்டியலில் உள்ள தளபதி விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி அன்று வரவுள்ளது. ஒவ்வொரு வருடமும் தளபதியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடுவது வழக்கம். மேலும் தளபதி திரைப்படங்கள் அன்றைய தினம் ரிலீஸ் ஆகாவிட்டாலும், அவருடைய சூப்பர் ஹிட் படங்கள் திரையரங்கங்களில் ஒளிபரப்பப்படும்.
மேலும் செய்திகள்: ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்..! அன்று முதல் இன்றுவரை அரிய புகைப்பட தொகுப்பு!
கோலிவுட் திரையுலகை போல், மலையாள திரையுலகில் உள்ள இவருடைய ரசிகர்களும், தளபதியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவார்கள்.
ஆனால் இந்த வருடம், உலக நாடுகளை கடந்து, இந்தியாவிற்குள் அழையா விருந்தாளியாக வந்திருக்கும் கொரோனா வைரஸ், குறிப்பாக தமிழகத்தில் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. இதில் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: ரோஜா படத்தில் மதுபாலா வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மிஸ் செய்த பைத்தியம் நான்..! குமுறிய நடிகை..!
எனவே இந்த ஆண்டு, தளபதியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மிக எளிமையாக கொண்டாட முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த விஜய், அவருடைய தரப்பில் இருந்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். இதனை தளபதியின் இளைஞர் அணி தலைவர் ஈசிஆர் சரவணன் வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில் கூறியிருப்பதாவது: தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி கொரனோ தாக்கம் அதிகமாகி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் பொதுமக்கள் நலன் கருதி ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எந்த ஒரு கொண்டாட்டங்கள், நலத்திட்டங்கள் வழங்குதல், மற்றும் செய்தித்தாள் விளம்பரங்கள், கொடியேற்றம் என எந்தவித செயல்களிலும் ஈடுபடாமல் பாதுகாப்பாக சமூக இடைவெளியை கடைபிடித்து குடும்பத்தை பார்த்துக் கொள்ளும்படியும், இதுவே நீங்கள் எனக்கு செலுத்தும் அன்பு என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்: ஊர்வசி கையில் தூக்கி வச்சியிருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?
ஏற்கனவே, அஜித் மே 1 ஆம் தேதி அன்று, தன்னுடைய பிறந்தநாள் கொட்டடப்பட்ட போது, ரசிகர்கள் எவ்வித கொண்டாட்ட நிகழ்ச்சிகளிலும் ஈடுபட வேண்டும் என அறிவுறித்தியதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது தல வழியை பின்பற்றி தளபதியும் தன்னுடைய பிறந்தநாள் நிகழ்ச்சி குறித்து அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.