நீங்க ஸ்ட்ரைக் பண்ணினால் என்ன ? நாங்க பாடம் எடுப்போம்ல !! அசத்தும் விஜய் ரசிகர்கள் !!

Published : Jan 23, 2019, 07:56 PM IST
நீங்க ஸ்ட்ரைக் பண்ணினால் என்ன ? நாங்க பாடம் எடுப்போம்ல !! அசத்தும் விஜய் ரசிகர்கள் !!

சுருக்கம்

ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பள்ளியில் விஜய் ரசிகர்கள் மாணவர்களின் கல்விக்காக இரண்டு ஆசிரியர்களை நியமித்து பாடம் எடுக்க வைத்ததை  பெற்றோர்கள் பெரிதும்  பாராட்டியுள்ளனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் அலுவலகப் பணிகளும், மாணவர்களுக்கு கற்பித்தலும் தடைபட்டிருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆசிரியர்கள் போராட்டத்தால் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளை  நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் திருப்பூர் சின்னியகவுண்டன் புதூரில் உள்ள ஆரம்ப பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரையில் பயிலும் 94 மாணவ,மாணவிகள் ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளிக்கு வந்தும் நேற்றும் இன்றும் வெளியில் சும்மா உட்கார்ந்திருந்தனர்.

இதையடுத்து விஜய் ரசிகர்கள் தங்களுக்குள் பணம் வசூல் செய்து இரண்டு பயிற்சி ஆசிரியர்களை ஏற்பாடு செய்தனர். அவர்கள் மூலம் அந்தப் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் கல்விப்பயில ஏற்பாடு செய்தனர். இதனால் மாணவ மாணவியர்கள் தடையின்றி பயின்றனர்.

திருப்பூர் விஜய் ரசிகர்கள் இணைந்து செய்யும் ஆக்க பூர்வ பணிகளை பெற்றோர்கள் பாராட்டியுள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. கேள்வி கேட்பான்.. ஈரோட்டில் கர்ஜித்த விஜய்
நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்