
சூப்பர் ஸ்டார் ரஜிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யாவின் இரண்டாவது திருமணம் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெற உள்ளது, உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருமணம் எங்கு நடைபெற உள்ளது என்பது பலரது கேள்வியாக இருந்தது.
சொந்தர்யா - விசாகன் திருமணம், மிகவும் பிரமாண்டமாக மண்டபத்தில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலில் இவர்களுடைய திருமணம், போயஸ் தோட்டத்தில் அமைத்துள்ள, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டில் தான் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இது மகளின் இரண்டாவது திருமணம் என்பதால், திருமணத்தை எளிமையாக வீட்டில் தான் வைக்க வேண்டும் என ரஜினி ஆர்டர் போட்டதால், இந்த முடிவுக்கு குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதாக நெருங்கிய வட்டாரத்தினர் கூறியுள்ளனர்.
மேலும் இவர்களுடைய திருமணம் வீட்டில் நடைபெற உள்ளதால், ரஜினிகாந்த் மற்றும் தொழிலதிபர் வணங்காமுடிக்கு நெருங்கிய சொந்த பந்தங்கள் , நண்பர்கள் மற்றும் குறிப்பிட்ட பிரபலங்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கு இன்னும் சில தினங்களே உள்ளதால், திருமண வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.