ஆட்டம் - பாட்டம் எல்லாம் போதும்! அரசியலில் குதித்த நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்தியா!

By manimegalai aFirst Published Jan 23, 2019, 6:58 PM IST
Highlights

பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்தியா, மருத்துவர்  ஸ்வேதா ஷெட்டி என்பவர் துவங்கியுள்ள 'தேசிய பெண்கள் கட்சியில்' இணைத்துள்ளார். இதனை உறுதி படுத்தும் விதமாக இன்று 'தேசிய பெண்கள் கட்சியின் சார்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். 
 

பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்தியா, மருத்துவர்  ஸ்வேதா ஷெட்டி என்பவர் துவங்கியுள்ள 'தேசிய பெண்கள் கட்சியில்' இணைத்துள்ளார். இதனை உறுதி படுத்தும் விதமாக இன்று 'தேசிய பெண்கள் கட்சியின் சார்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். 

பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து, காமெடி வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் தாடி பாலாஜி. தற்போது இவருக்கு அதிகப்படியான பட வாய்ப்புகள் இல்லாததால், பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், நடுவராகவும் இருக்கிறார்.

சமீப காலமாக, தாடி பாலாஜிக்கும் அவருடைய மனைவி, நித்தியாவிற்கும் ஒரு சில கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், மனைவியை சமாதான படுத்துவதற்காக, பிரபல தனியார் தொலைக்காட்சியில், கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2  நிகழ்ச்சியில் மனைவி கலந்து கொண்டு விளையாடுகிறார் என்பதை அறிந்து அவரும் கலந்து கொண்டார். அவர் நினைத்து போலவே நித்தியாவும் மனதளவில் அவரை மன்னித்தார். ஆனால் முழுமையாக அவரை ஏற்றுக்கொள்ள வில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் நித்தியா அவ்வப்போது ஹெல்மெட் விழிப்புணர்வு, போன்ற சமூக அக்கறை கொண்ட விஷயங்களிலும் கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில் தற்போது அரசியலிலும் குதித்துள்ளார்.

அதாவது பெண்கள் மட்டுமே இணைந்து செயல்படக்கூடிய, "தேசிய பெண்கள் கட்சி' என்கிற பெயரில் மருத்துவர் ஸ்வேதா ஷெட்டி துவங்கியுள்ள கட்சியில், தற்போது நித்தியாவும் இணைத்துள்ளார். இன்று இந்த கட்சியின் சார்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவரும் கலந்துகொண்டுள்ளார்.

'தேசிய பெண்கள் கட்சி' முழுக்க முழுக்க பெண்களுக்காக துவங்கப்பட்டுள்ளது, பெண்களின் உரிமை, பெண்கள் மீது நடைபெறும் வன்முறை ஆகியவற்றிக்கு குரல் கொடுக்கவும் போராடவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆட்டம், பாட்டம் என தன்னுடைய மகளுடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் இனி முழு நேர அரசியல் வேலையில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!