
கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய டாக்டர் படம் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இவ்வாறு அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி உள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடித்துள்ளனர். மேலும் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, ரெடின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியாவில் நடத்திய படக்குழு, அடுத்தகட்ட படப்பிடிப்புகளை சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடத்தியது. சுமார் 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு இன்று முழுவதுமாக நிறைவடைந்தது. இதையொட்டி நடிகர் விஜய், இயக்குனர் நெல்சனை கட்டிப் பிடித்தவாறு இருக்கும் புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டது.
படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், விரைவில் பீஸ்ட் படத்தின் பின்னணி பணிகள் தொடங்கப்பட உள்ளது. இப்படத்தை அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விடுமுறையில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பீஸ்ட் எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்கள், விஜயின் பாடல் பாடும் வீடியோ மற்றும் சிவகார்த்திகேயன், நெல்சன், அனிரூத் இடம்பெற்றுள்ள டாக்டர் பட வீடியோவையும் இணைந்து பீஸ்ட் பட வீடியோவை உருவாக்கியுள்ளனர். அந்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
"
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.