
பிக் பாஸ் சீசன் 5-ல் ஒருவழியாக காதல் காட்சிகள் ஆரம்பமாகிவிட்டன. தற்போது வீட்டில் போட்டியாளர்களின் பிரியங்கா, தாமரை, அக்ஷ்ரா, பாவனி என 4 பெண் போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் பாவனி மீது ஆரம்பத்திலிருந்தே கணவரை இழந்தவர் என்கிற கரிசனத்தை ஆண் போட்டியாளர்கள் காட்டி வந்தனர். அதிலும் அபிநய் அதீத அன்பை பொலிந்து வந்தார். இது பாவனிக்கும் ஆறுதலை தந்தது. பின்னர் திடீரென அபிநய் தன்னை காதலிப்பது பிடிக்கவில்லை என பாவனி மற்ற ஹவுஸ்மேட்டிடம் கூறினார்.
இருந்தும் அபிநய் தனது நிலையில் இருந்து விலகுவதாக தெரியவில்லை. இது தொடர்பாக ஹவுஸ்மேட்ஸை தொடர்ந்து கமலும் கடந்த வாரம் கலாய்த்து விட்டார். பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் பலி போட்டு கொண்டனர்.
இதற்கிடையே வைல்ட் கார்ட் என்ட்ரியில் வீட்டிற்குள் வந்த அமீர் கொஞ்ச நாட்களிலேயே பாவனியை வசியம் செய்து விட்டார். ஏற்கனவே கடந்த வாரத்தில் ஒருவருக்கொருவர் மீதுள்ள ஈர்ப்பை இருவரும் வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் நேற்று பாவனியை நெருங்கியா அமீர் ரகசியம் கூறுவது போல அருகில் சென்று பாவனியின் கன்னத்தில் குத்தமிட்டுள்ளார்.
ஏற்கனவே சீசன் ஒன்றில் ஓவியவிடம் இதே போல நடந்து கொண்ட ஆரவ் அதற்கு மருத்துவ முத்தம் என்னும் பெயரை சூட்டி விட்டு ஓவியாவை கழட்டி விட்டுவிட்டார்.
இதேபோல தற்போது அமீர் நடந்து கொள்வதால் கடுப்பான ரசிகர்கள் வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வந்த அமீரை உடனடியாக ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என வலியுறுத்து வருகின்றனர்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.