Udhayanidhi New Movie: அடுத்த கட்டத்துக்கு சென்ற ‘நெஞ்சுக்கு நீதி’.... மாஸான அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Published : Dec 18, 2021, 08:55 PM IST
Udhayanidhi New Movie: அடுத்த கட்டத்துக்கு சென்ற ‘நெஞ்சுக்கு நீதி’.... மாஸான அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

சுருக்கம்

அருண்ராஜா காமராஜ் இயக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ (Nenjuku Needhi) திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi stalin), போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வான உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியலில் ஆர்வம் காட்டி வந்தாலும், சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நெஞ்சுக்கு நீதி’. இப்படத்தை வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார்.

இது இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். இவர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த கனா படத்தின் இயக்குனர் ஆவார். இப்படத்தில் உதயநிதி, இதுவரை நடித்திராத போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

உதயநிதிக்கு ஜோடியாக கருப்பன் பட நடிகை தன்யா நடித்துள்ளார். மேலும் மயில்சாமி, சரவணன், ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ், இசையில் உருவாகும் இந்த படத்திற்கு, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் இப்படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கி உள்ளார். இதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Swetha Lakshman : படம் பிடிக்கலைனா நடுரோட்ல மொட்டை அடிச்சுக்கிறேன்: ரசிகர்களிடம் நடிகை ஓபன் சேலஞ்ச்
OTT Crime Thriller Movies : கிரைம் த்ரில்லர் ரசிகர்களே நோட் பண்ணுங்க... ஜியோஹாட்ஸ்டாரில் இருக்கும் 5 தரமான மலையாள படங்கள்!