Rajinikanth: காத்திருந்த இளம் இயக்குனருக்கு அல்வா..? பாலிவுட் இயக்குனருடன் கூட்டணி வைக்கிறாரா சூப்பர் ஸ்டார்!

Published : Dec 18, 2021, 07:38 PM IST
Rajinikanth: காத்திருந்த இளம் இயக்குனருக்கு அல்வா..? பாலிவுட் இயக்குனருடன் கூட்டணி வைக்கிறாரா சூப்பர் ஸ்டார்!

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth), அடுத்ததாக பாலிவுட் இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்ததாக பாலிவுட் இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான 'அண்ணாத்த' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. வசூலிலும் 100 கோடியை எட்டியதை தொடர்ந்து, குஷியான சூப்பர் ஸ்டார்... இந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா வீட்டுக்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தது மட்டும் இன்றி, தங்க சங்கிலியை பரிசாக கொடுத்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் தீவிரமாக அடுத்த படத்தின் நடிக்க கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: Athulyaa Ravi: தாறுமாறாக கிழிந்த பேன்ட்டில்... குத்த வைத்து அமர்ந்து குட்டி இடுப்பை காட்டிய அதுல்யா ரவி!

 

அந்த வகையில் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குபவர் லிஸ்டில் முதலில் இருப்பவர், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தான். இவரை தொடர்ந்து,  கேஎஸ் ரவிக்குமார்,  கார்த்திக் சுப்புராஜ், பாண்டிராஜ், வெங்கட்பிரபு என லிஸ்ட் நீண்டு கொண்டே சென்றாலும் இதுவரை யார் ரஜினிகாந்தின் அடுத்த பட இயக்குனர் என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்: Biggboss Amir: பிக்பாஸ் அமீருக்கு இப்படி ஒரு கொடுமை நடக்க கூடாது.. இவரின் சோகமான கதையை கேட்டு ஷாக்கான ரசிகர்க

மேலும் செய்திகள்: Biggboss Amir: பிக்பாஸ் அமீருக்கு இப்படி ஒரு கொடுமை நடக்க கூடாது.. இவரின் சோகமான கதையை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்

 

இந்நிலையில் இந்த லிஸ்டில் புதிய இயக்குனர் ஒருவரின் பெயரும் தற்போது இணைந்துள்ளது. பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனரான பால்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து கதை ஒன்றை கூறி உள்ளதாகவும் இந்த கதை ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்து போனதால் அடுத்த படத்தை அவர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் பால்கி ஏற்க்கனவே  அமிதாப் பச்சன், தனுஷ் நடித்த ’ஷமிதாப்’ படத்தை இயக்கியவர்.

மேலும் செய்திகள்: Shivani Narayanan: இவ்வளவு டைட் டிரஸ்ஸா.. ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ஷிவானியின் கிக் ஏற்றும் கவர்ச்சி போஸ்!

 

அதே போல் ஸ்ரீதேவி, அஜித் நடித்த ’இங்கிலீஷ் விங்கிலீஷ்’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர். தற்போது மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்து வரும் பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பல இயக்குனர்கள் தலைவரின் படத்தை இயக்க காத்திருக்கும் நிலையில்... குறிப்பாக இளம் இயக்குனர்களுக்கும் அல்வா கொடுத்து விட்டு, பாலிவுட் இயக்குனர் படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க போகிறாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இது வரை, இப்படம் குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?
ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ