
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில், போதை மருந்து பார்ட்டி கொண்டாடியதாக, அக்டோபர் 3 ஆம் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால், ஷாருகான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்கு பின்னர், அக்டோபர் 8 ஆம் தேதி மும்பை ஆதார் சாலை சிறையில் அடைக்கப்பட்டனர். ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வந்த திரைப்படம், அக்ஷய் குமாருடன் நடிக்க இருந்த விளம்பரப்படம் என அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு மும்பை வந்து சேர்ந்தார் ஷாருகான். பல முறை மகனை வெளியே கொண்டு வர நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த போதும், அவை நிராகரிக்கப்பட்டது. இது ஷாருகானை மட்டும் இன்றி அவரது குடும்பத்தினரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
பின்னர் அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. சுமார் 3 வாரத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
இதையடுத்து ஆர்யன் கானுக்கு கவுன்சிலிங் கொடுக்க பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்தன. இந்நிலையில் அன்றாட அலுவல்கள் செய்ய ஆர்ம்பித்துள்ள ஆர்யன் கானுகு போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டது.
இதற்கிடையே வெளிநாடு சென்று சினிமா பற்றி கற்றுக் கொள்ள முடிவெடுத்திருந்த ஆர்யன் கானின் பாஸ்போர்ட்டை உயர்நீதிமன்றம் ஒப்படைக்கும்படி கூறியதால் வெளிநாடு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. எனவே உள்நாட்டிலேயே சினிமா தயாரிப்பு பயிற்சியில் ஈடுபட வைக்க ஷாருக்கான் முயற்சித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.