கிரைண்டர்... மிக்சி... மட்டும் இல்ல இலவச வீடும் வேண்டாம்! வீட்டை உடைத்த ரசிகரின் (வீடியோ)!

Published : Nov 12, 2018, 01:30 PM IST
கிரைண்டர்... மிக்சி... மட்டும் இல்ல இலவச வீடும் வேண்டாம்! வீட்டை உடைத்த ரசிகரின் (வீடியோ)!

சுருக்கம்

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி தினம் அன்று வெளியான திரைப்படம் 'சர்கார்'. பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் தற்போது வரை, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தமிழ்நாடு மட்டும் இன்றி மற்ற இடங்களிலும் முதலுக்கு மோசம் இல்லாத வகையில் நல்ல வசூல் செய்து வருகிறது.  

ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக இந்த படத்தில் இருந்து நான்கு காட்சிகள் துண்டிக்கப்பட்டதால், முன்பு இருந்த வரவேற்பை விட இப்போது இந்த படத்திற்கு சற்று வரவேற்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்... ஏற்கனவே விஜய் ரசிகர்கள் சிலர், திரைப்படத்தில் வந்த காட்சிகளை போல சிலர் தங்கள் வீட்டில் இருந்த , இலவச பொருட்கள் மிஸ்சி கிரைண்டர் போன்றவற்றை உடைத்து விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர்.  

இதைத்தொடர்ந்து தற்போது ரசிகர் ஒருவர் ஒரு படி மேலே சென்று அரசாங்கம் இலவசமாக கட்டிக்கொடித்த வீட்டை உடைக்கிறார் என கூறி ஒரு வீடியோ வெளியாகி பார்ப்பவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் இது உண்மையில் விஜய் ரசிகர் வீட்டை உடைக்கும் காட்சியா அல்லது வேறு ஏதாவது பணிக்காக வீடு உடைக்கப்படுகிறதா என உண்மை தகவல் வெளியாகவில்லை.

வீடியோ:

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!