’அட போங்கய்யா நீங்களும் உங்க தயாரிப்பாளர் சங்கமும்’ ... திமிர் காட்டும் விஜய் ஆண்டனி

Published : Nov 12, 2018, 01:01 PM ISTUpdated : Nov 12, 2018, 01:02 PM IST
’அட போங்கய்யா நீங்களும் உங்க தயாரிப்பாளர் சங்கமும்’ ... திமிர் காட்டும் விஜய் ஆண்டனி

சுருக்கம்

வரும் 16ம் தேதி ரிலீஸாகவேண்டிய படங்களின் பட்டியலில் அனுமதி கிடைக்காத நிலையிலும் படத்தை அதே தேதியில் ரிலீஸ் பண்ணியே தீருவேன் என்று அடம் பிடிக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி. இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் 16ம் தேதி ரிலீஸாகவேண்டிய படங்களின் பட்டியலில் அனுமதி கிடைக்காத நிலையிலும் படத்தை அதே தேதியில் ரிலீஸ் பண்ணியே தீருவேன் என்று அடம் பிடிக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி. இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இச்செய்தியை சற்றுமுன்னர் ட்விட்டரில் உறுதி செய்த விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமா, ‘இண்டஸ்ட்ரி தரும் பெரும் அழுத்தத்தையும் தாண்டி தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் ‘திமிரு புடிச்சவன்’ ரிலீஸ் ஆகியே தீரும் என்கிறார். மேலும் தெலுங்கில் ‘ரோசகாடு’ என்ற பெயரில் வெளியாகும் ‘திமிரு புடிச்சவன்’ பட புரமோஷன் நிகழ்ச்சிகள் இன்று மாலை ஹைதராபாத்தில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெறுகிறது என்ற தகவலையும் பகிர்ந்துள்ளார்.

ரிலீஸாகும் மற்ற படங்களோடு ஒப்பிடுகையில் விஜய் ஆண்டனி படத்துக்கு சற்று கூடுதலான தியேட்டர்கள் கிடைக்கும் என்பதால் அதே தேதியில் ரிலீஸாவதாக இருக்கும் ‘காற்றின் மொழி’, சித்திரம் பேசுதடி2’, ‘உத்தரவு மகாராஜா’, மற்றும் ‘செய்’ படக்குழுவினர் விஜய் ஆண்டனி மீது செம கடுப்பில் உள்ளனர்.

16ம் தேதிக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் விஜய் ஆண்டனி எடுத்துள்ள முடிவுக்கு தயாரிப்பாளர் சங்கம் வளைந்துகொடுத்தால் சங்கத்தின் செல்வாக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் அளவுக்கு உப்புமா சங்கம் ஆகிவிடும் என்பது உறுதி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிழிந்த ஆடை அணிந்த டாக்ஸிக் நடிகை: விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!
ஜெட் வேகத்தில் நடந்து முடிந்த ஷூட்டிங்: திரையரங்கு ரேஸில் இடம் பிடிக்கும் D54 படம்!