பிரபல நடிகை 2 ஆவது திருமணம்..! மகன் முன்னிலையில் இயக்குனரை கரம் பிடித்த போட்டோ..!

Published : Nov 12, 2018, 01:04 PM ISTUpdated : Nov 13, 2018, 12:38 PM IST
பிரபல நடிகை 2 ஆவது திருமணம்..! மகன் முன்னிலையில் இயக்குனரை கரம் பிடித்த போட்டோ..!

சுருக்கம்

தமிழில் "வெண்நிலா வீடு" திரைப்படத்தில் நடித்தவர் மலையாள நடிகை சிரிண்டா. இவர் தற்போது  மலையாள இயக்குனர் சிஜூ எஸ் பாவாவை இராண்டாவது திருமணம் செய்து உள்ளார்.

மிழில் "வெண்நிலா வீடு" திரைப்படத்தில் நடித்தவர் மலையாள நடிகை சிரிண்டா. இவர் தற்போது  மலையாள இயக்குனர் சிஜூ எஸ் பாவாவை இராண்டாவது திருமணம் செய்து உள்ளார்.

மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள சிரிண்டா, தனது 19 ஆவது வயதில் அஷப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சுமார் 4 ஆண்டுகள் அவருடன் சேர்ந்து வாழ்ந்த சிரிண்டா, கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார்.

இவருக்கு ஒரு ஆண் மகன் உள்ளார். இந்த நிலையில் சில மாதங்களாக இயக்குனர் சிஜூ எஸ் பாவாவை காதலித்து வந்தார். இவர்களின் திருமணத்திற்கு இருவர் வீட்டிலும் ஓகே சொன்னதை அடுத்து நேற்று நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைப்பெற்றது.

இவர் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துப்பாக்கி கொடுத்தவருடன் மோதும் எஸ்கே – ஜன நாயகன் படத்துக்கு பராசக்தி போட்டி; ஜன.,10ல் ரிலீஸ்!
கிழிந்த ஆடை அணிந்த டாக்ஸிக் நடிகை: விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!