தனது டிரைவர் மகள் திருமணத்தில் சங்கீதாவுடன் கலந்துகொண்ட விஜய்...’தல’ ரசிகர்களைக் கலாய்க்க ஒரு சான்ஸ்...

Published : Mar 05, 2019, 03:56 PM IST
தனது  டிரைவர் மகள் திருமணத்தில்  சங்கீதாவுடன் கலந்துகொண்ட விஜய்...’தல’ ரசிகர்களைக் கலாய்க்க ஒரு சான்ஸ்...

சுருக்கம்

தன்னிடம் நீண்டகாலமாக கார் டிரைவராகப் பணியாற்றி வரும் ராஜேந்திரன் என்பவரின் மகள் திருமண வரவேற்புக்கு நடிகர் விஜய் தனது மனவியுடன் கலந்துகொண்டு வாழ்த்திய புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

’உங்க தல டிரைவர் வீட்டுக் கல்யாணத்துக்கெல்லாம் போவாராய்யா?’ என்று அஜீத் ரசிகர்களைக் கலாய்க்க ஒரு சான்ஸ் தரும் விதமாக, தன்னிடம் நீண்டகாலமாக கார் டிரைவராகப் பணியாற்றி வரும் ராஜேந்திரன் என்பவரின் மகள் திருமண வரவேற்புக்கு நடிகர் விஜய் தனது மனவியுடன் கலந்துகொண்டு வாழ்த்திய புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து இருவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்படுகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் விளையாட்டுப் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். இதற்கு ஏற்ற வகையில் தன்னுடைய உடலமைப்பையும் மாற்றியுள்ளார் விஜய். சென்னையில் தொடங்கிய முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. விரைவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், சென்னையில் நேற்று (மார்ச் 4) நடைபெற்ற தன் கார் டிரைவர் ராஜேந்திரன் மகள் திருமண வரவேற்பில், தன் மனைவி சங்கீதாவுடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார் விஜய். அந்தப் புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், இயக்குநர் அட்லீ ஆகியோரும் இந்தத் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

முதலில் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கு டிரைவராகப் பணியாற்றிய ராஜேந்திரன் பின்னர் விஜயின் பெர்சனல் டிரைவராகி, அவரிடம் மட்டும் 15க்கும் மேற்பட்ட ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?