
தல அஜித் பற்றி, எந்த தகவல் வெளிவந்தாலும், அதனை ட்ரெண்ட் செய்தே தீருவோம் என கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றனர் அஜித் ரசிகர்கள்.
அஜித்தின் பட அறிவிப்பு வந்தாலே கேக் வெட்டி கொண்டாடும் இவர்கள், ஃபஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஆவலோடு காத்திருந்த படத்தின் பெயர் வெளியானால் சொல்லவா வேண்டும். ஒரே நாள் இரவில் சமூக வலைத்தளத்தில், அனல் பறக்கும் அளவிற்கு வேகமாக பரவ செய்து விட்டனர்.
அதாவது.. நேற்றைய தினம் அஜித்தின் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த, 59வது பட ஃபஸ்ட் லுக் மற்றும் பட பெயர் 'நேர் கொண்ட பார்வை' என்று படக்குழுவினர் அதிகார பூர்வமாக அறிவித்தனர்.
இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபல இயக்குனர் ஆதின் ரவிச்சந்திரன், எமோஷ்னலாக அஜித் குறித்து ஒரு பதிவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில்..."யாருக்கு பேனர், போஸ்டர் எல்லாம் அடித்தேனோ அவருடைய படத்தில் தற்போது நடித்துளேன்.
அவருடன் நடித்த 15 நாட்களில், என் வாழ்க்கையை மாற்றி திருத்தி விட்டார். இதற்காக அஜித், சுரேஷ், மற்றும் இயக்குனர் வினோத் அவர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.