படத்தில் விமர்சனங்களுக்கு முற்று புள்ளி வைத்த விக்னேஷ் சிவன்...ரிலீசுக்கு பிறகு முதல் முறையாக போட்ட ட்விட் ...

By Anu KanFirst Published Apr 29, 2022, 1:53 PM IST
Highlights

Vignesh Shivan: காத்து வாக்குல ரெண்டு காதல் பட விமர்சனங்களுக்கு, இயக்குனர் விக்னேஷ் சிவன் முதல் முறையாக ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணியில், நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமான ‘நானும் ரவுடி தான்' வெற்றிக்கு பிறகு, ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்: 

இந்நிலையில், விக்னேஷ் சிவன் ''காத்து வாக்குல ரெண்டு காதல்'' படத்தின் மூலம் மீண்டும் தன் வெற்றிக் கூட்டணியுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்தில் கூடுதலாக நடிகை சமந்தாவும் இணைந்துள்ள நிலையில், படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன், நயன்தாரா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசைமையத்துள்ளார். 

முக்கோண காதல் கதை:

அனிருத் இசையில் ஏற்கனவே பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் அடித்துள்ள நிலையில், இதில், கண்மணி கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.   

மேலும் படிக்க....KRK box office: காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு...முதல் நாள் மட்டும் இவ்வளவு வசூலா? குஷியில் நயன்தாரா..

இவர்கள் இருவரையும் காதலிப்பவராக ராம்போ எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடித்துள்ளார். மேலும், டாக்டர் பட புகழ் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

படம் எப்படி? ரசிகர்கள் கருத்து:

இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நிச்சயம் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ஹிட் படம் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.  இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. அதே சமயம் இப்படமும் பலரிடமும் கலவையான விமர்சனங்கள் பெறுவதை பார்த்து வருகிறோம்.

முதல் முறையாக ட்விட் போட்ட விக்னேஷ் சிவன்:

 இந்நிலையில் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பு குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் முதல் முறையாக ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் "படத்தின் மிகப்பெரிய வரவேற்புக்கு நன்றி! நீண்ட பல போராட்டங்களுக்குப் பிறகு இப்படத்தை திரையரங்குகளில் கொண்டு வந்ததற்கான பலனை ரசிகர்களின் புன்னகையில் கண்டு மகிழ்கிறேன். அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.
 


 

click me!