
தமிழ் திரையுலகில் தன்னிகரற்ற நாயகனாக உயர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயன் நெல்சனின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தைத் தொடர்ந்து தற்போது டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை விஜய்யின் ஆஸ்தான இயக்குனராக இருந்த அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். இவரின் முதல் படம் இதுவாகும்.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, எஸ் ஜே சூர்யா, சரவணன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
டான் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கேஎம் பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன் கம்பெனி மற்றும் சிவகார்த்திகேயன் புரோடக்சன் இணைந்து தயாரித்து வருகின்றனர். டான் படத்தை விநியோகிக்கும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவி கைப்பற்றியுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர், சென்னை, பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற்றது. ஒரே ஒரு பாடல் மட்டும் ஆக்ராவில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படமும் ரிலீஸாக இருந்ததால் தேதி மாற்றப்பட்டு வருகிற மே 13ஆம் தேதி திரையிடப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.
ஏற்கனவே இந்த படத்தில் இருந்து ஜலபுல ஜங் மற்றும் பே ஆகிய இரு பாடல்கள் வெளியாகி ஹிட் கொடுத்தது. இந்நிலையில் டான் படத்திலிருந்து 'பிரைவேட் பார்ட்டி'(PRIVATE PARTY) என்னும் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.