
பிரபல விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி நம்பர் ஒன்னில் இருக்கும் குக் வித் கோமாளி தற்போது 3வது சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது. ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ஷெஃப் தாமோதரன், ஷெஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். முதல் சீசனில் வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார்.
இரண்டாவது சீசனில் கனி கோப்பையை தட்டி சென்றார். இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், சிவாங்கி, சுனிதா, மணிமேகலை, முகம்மது குரைஷி, சக்தி, அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், பாரத் கே ராஜேஷ், ஷித்தன் கிளாரின், சரத் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர். முந்தைய இரண்டாவது சீசனில் என்ன சொல்லப் போகிறாய் நாயகன் அஸ்வினுடன் சிவாங்கி போட்டிருந்த காமெடி கூத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இந்நிகழ்ச்சி பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது.
இந்நிலையில் மூன்றாவது சீசனில் வித்யுல்லேகா ராமன்,ரோஷ்னி ஹரிப்ரியன், ஸ்ருத்திகா அர்ஜுன், கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராமி, தர்ஷன், சந்தோஷ் பிரதாப், அந்தோணிதாசன், மனோபாலா, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இதில் சந்தோஷ் பிரதாப், அந்தோணிதாசன், மனோபாலா, ராகுல் தத்தா ஆகியோர் எலிமினேஷன் ஆகிய நிலைகள் தற்போது இரண்டு பிரபலங்கள் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் உள்நுழைய உள்ளனர்.
குக் வித் கோமாளில் 3 நிகழ்ச்சியில் பிரபல காமெடியன் சுட்டி அரவிந்த் கலந்து கொள்ளவுள்ளார். இவர் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா', 'நட்பே துணை' போன்ற பிரபலமான படங்களில் பணியாற்றியுள்ளார். அதோடு கலக்கப்போவது யாரு 2012இல் ரோபோ ஷங்கருக்கு இவர் ஜோடியாக தோன்றி ரசிகர் பட்டாளத்தையே பெற்றுவிட்டார். சுட்டி அரவிந்தை தொடர்ந்து சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த வேட்டை முத்துக்குமாரும் வைல்ட் கார்டில் வர உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.