Vignesh shivan: 'AK 62' உறுதி செய்த விக்னேஷ் சிவன்... கதை பற்றி அவரே சொன்ன விஷயம்...குஷியில் அஜித் ரசிகர்கள்..

Published : Apr 29, 2022, 12:00 PM IST
Vignesh shivan: 'AK 62' உறுதி செய்த விக்னேஷ் சிவன்... கதை பற்றி அவரே சொன்ன விஷயம்...குஷியில் அஜித் ரசிகர்கள்..

சுருக்கம்

Vignesh shivan: AK 62 பட கதையை விக்னேஷ் சிவன் உறுதி செய்துள்ளார். மேலும், கதை பற்றிய அப்டேட் தகவலையும் பகிர்ந்து கொண்டுள்ளார். 

நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து போனிகபூர், வினோத், அஜித்குமார் கூட்டணியில் கடந்த பிப்ரவரி 24 ம் தேதி வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தந்தாலும், வசூலில் 200 கோடியை கடந்து பெரும் சாதனை படைத்தது. 

அஜித் 61 ஷூட்டிங்கில் அஜித்:

வலிமை வெற்றியை தொடர்ந்து, அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைகின்றனர். ‘அஜித் 61’ படபிடிப்பு ஐதராபாத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில், அஜித் ஹீரோவாக ஒரு கெட்டப் மற்றும் வில்லனாக ஒரு கெட்டப் என இரண்டு கெட்டப்பில் நடிக்கிறார். 

அஜித் 62 வில் விக்னேஷ் சிவன் - அஜித் கூட்டணி:

அடுத்து, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், தனது 62வது படத்திற்காக விக்னேஷ் சிவன் உடன் அஜித் கூட்டணி சேர்ந்து இருக்கிறார். அதன் அதிகாரப்பூர்வ தகவல் கடந்த மார்ச் மாதமே வெளியாகி ரசிகர்களை குஷி ஆக்கியது.இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.  படம் முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை மையமாக கொண்டது என்று கூறப்படுகிறது.  

இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது. இதில் அனிரூத் இசையமைக்கவுள்ளார். இதையடுத்து அஜித் 62 குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அஜித், ஏ.கே.62 படத்தில் நடிக்க அஜித்திற்கு ரூ. 105 கோடி பேசப்பட்டுளளதாக தெரிகிறது. மேலும், அஜித் இதில் அரசியல் தொடர்பான காட்சிகள் இடம் பெற கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.

விக்னேஷ் சிவன், காத்து வாக்குல ரெண்டு காதல்:

இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தார, சமந்தா நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் பெற்று வருகிறது. 

கதை பற்றி விக்னேஷ் சிவன்:

முன்னதாக, விக்னேஷ் சிவன் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக ரசிகர்களுடன் பேசினார். அப்போது ரசிகர்கள் அஜித் படம் பற்றியும் கேட்டனர். அப்போது, AK 62 பட கதையை விக்னேஷ் சிவன் உறுதி செய்துள்ளார். மேலும், ''இந்த கதைக்காக கடந்த மூன்று வருடங்காக உழைத்து வருவதாகவும், நிச்சயமாக இது அனைவருக்கும் பிடிக்கும்'' என கூறியுள்ளார். இதை கேட்ட அஜித் ரசிகர்கள் குஷி மோடில் துள்ளி குதித்தனர்.

மேலும் படிக்க....KRK box office: காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு...முதல் நாள் மட்டும் இவ்வளவு வசூலா? குஷியில் நயன்தாரா..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Chaitra Reddy : கணவரை டைவர்ஸ் செய்தாரா கயல் சீரியல் நடிகை? 6 வருட திருமண வாழ்க்கைக்கு எண்ட் கார்டு போட்டாரா சைத்ரா ரெட்டி?
Karthigai Deepam : கனடாவுக்கு கிளம்பும் ரேவதி... சாமுண்டீஸ்வரியின் சதித்திட்டம் பலிக்குமா?