Abhirami : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போது ஸ்மோக்கிங் ரூமில் பாலாவுடன் நடத்தது என்ன என்பது குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு அபிராமி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் நடத்தப்பட்டு உள்ளது. இந்த 5 சீசன்களிலும் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்கள் சிலரை தேர்ந்தெடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பிரத்யேகமாக ஓடிடிக்கென நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியை முதல் 3 வாரம் நடிகர் கமல்ஹாசனும், அடுத்த 7 வாரம் நடிகர் சிம்புவும் தொகுத்து வழங்கினர்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஓடிடிக்கென நடத்தப்பட்டதால், அதில் ஸ்மோக்கிங் ரூமில் நடக்கும் விஷயங்களையும் ஒளிபரப்பினர். இதனால் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன. முதல் வாரத்தில் ஸ்மோக்கிங் ரூமில் ஆண் போட்டியாளர்களுடன் இணைந்து அபிராமி சிகரெட் பிடிக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
அடுத்ததாக ஸ்மோக்கிங் ரூமில் பாலாவும், அபிராமியும் நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்டது. இந்த சர்ச்சைகள் குறித்து தெளிவான விளக்கம் கொடுக்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது பிக்பாஸ் அல்டிமேட் முடிவடைந்து சில வாரங்கள் ஆகும் நிலையில், நடிகை அபிராமி ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக கலந்துரையாடினார்.
undefined
அப்போது ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அபிராமி பதிலளித்தார். அதில் ஒருவர் ஸ்மோக்கிங் ரூமில் பாலாவுடன் நடத்தது என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அபிராமி, “உண்மையாக சொல்லவேண்டும் என்றால் எதுவும் நடக்கவில்லை. எதையும் தைரியமாக கூறுபவள் நான். 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்” எனக் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... samantha : பிறந்தநாளன்று நள்ளிரவில் விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்... கண்கலங்கிய சமந்தா - வைரலாகும் வீடியோ