MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • KRK box office: காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு...முதல் நாள் மட்டும் இவ்வளவு வசூலா? குஷியில் நயன்தாரா..

KRK box office: காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு...முதல் நாள் மட்டும் இவ்வளவு வசூலா? குஷியில் நயன்தாரா..

KRK box office: காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் பெற்று தந்துள்ள நிலையில், தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : Anija Kannan | Asianet News
Published : Apr 29 2022, 10:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
kathuvakula rendu kadhal

kathuvakula rendu kadhal

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் நேற்று வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம், மக்களிடையே பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று தந்துள்ளது. 

28
kathuvakula rendu kadhal

kathuvakula rendu kadhal

நானும் ரௌடிதான் படத்திற்கு பிறகு, மீண்டும் இணைந்து பெரிய எதிர்பார்ப்புகளுடன் இன்று திரைக்கு வந்துள்ள இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காமெடியை அதிகமாக கொண்டுள்ள இந்தப் படம் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவனின் அடுத்த படைப்பாக வெளியாகியிருக்கிறது. 

38
kathuvakula rendu kadhal

kathuvakula rendu kadhal

அனிருத், தனது 25 வது படமான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு இசையில் பட்டையை கிளப்பி இருக்கிறார். இந்த திரைப்படத்தை, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ளது. 

48
kathuvakula rendu kadhal

kathuvakula rendu kadhal

முக்கோண காதல் கதையை கொண்ட இந்த படத்தில், கதிஜாவாக சமந்தாவும், கண்மணியாக நயன்தாராவும்,  சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடித்துள்ளார். மேலும், டாக்டர் பட புகழ் ரெடின் கிங்ஸ்லி இந்தப் படத்தில் சிறப்பான காமெடியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

58
kathuvakula rendu kadhal

kathuvakula rendu kadhal

இப்படத்தில் டீஸர், பாடல்களே மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. அதிலும் நயன்தாரா மற்றும் சமந்தா என இரண்டு முன்னணி நடிகைகள் இதில் பட்டையை கிளப்பியுள்ளது. 
 

68
kathuvakula rendu kadhal

kathuvakula rendu kadhal

மொத்தத்தில், விக்னேஷ் சிவன் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் சிறப்பான சம்பவம் செய்துள்ளார்  என்று இளசுகள் துள்ளி குதித்து வருகின்றனர். 

78
kathuvakula rendu kadhal

kathuvakula rendu kadhal

இந்நிலையில், தொடர்ந்து இந்த படத்தின் தகவல் மற்றும் வசூல் விவரம் வெளிவந்த வண்ணம் உள்ளது. தற்போது இப்படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் விவரம் வெளியாகியுள்ளது. அதன் படி, படம் முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ. 66 லட்சம் வசூலித்துள்ளதாம். 

 

88
kathuvakula rendu kadhal

kathuvakula rendu kadhal

நேற்று விக்னேஷ் சிவன் படம் ரிலீஸ் ஆகி நன்றாக வெற்றிப் பெற வேண்டும் என திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்த நிலையில், அவரின் வேண்டுதல் நிறைவேறுவதற்கு நல்ல தொடக்கமாக தெரிகிறது.

About the Author

AK
Anija Kannan
விஜய் சேதுபதி
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved