vignesh shivan : விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதற்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. விஜய்சேதுபதி, சமந்தா, நயன்தாரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இது அவர் இசையமைக்கும் 25-வது படமாகும்.
படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதற்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அனிருத் உடன் இசைக் கோர்ப்பு பணியில் ஈடுபட்டபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இப்படம் குறித்தும், அதன் அனுபவம் குறித்தும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ஒரு இயக்குனராக எனக்கு சிறந்த அனுபவத்தை கொடுத்தது இந்த கடைசி 5 நாட்கள் தான். முழுவதுமாக அனிருத் உடன் நேரத்தை செலவழித்து, திறமையான நடிகர்கள் நடித்த ஒவ்வொரு சீனையும் பார்க்கும் போது புத்துணர்ச்சியாக உள்ளது. என் காதலும், என் குழந்தையுமான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ உடன் கடைசி 5 நாட்கள்.
நிறைய அன்போடும், அரவணைப்போடும் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். பிரியப்போகிறோம் என்கிற வலி ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. அது கொஞ்சம் கடினமாகத்தான் உள்ளது. இருந்தாலும் அந்த வலி மதிப்புமிக்கது. ஏனெனில் வலி இல்லாமல் எந்த காதலும் இல்லை” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ புரமோஷனுக்காக IPL-ஐ பயன்படுத்தும் விக்னேஷ் சிவன் - இது வேறலெவல் ஐடியாவா இருக்கே!